தெற்கு ரயில்வேயின் கடைசி மீட்டர்கேஜ் பாதை மூடல் : திருவாரூர்-பட்டுக்கோட்டை ரயிலுக்கு குட் பை by riteshexpert on 19 October, 2012 - 06:00 AM | ||
---|---|---|
riteshexpert | தெற்கு ரயில்வேயின் கடைசி மீட்டர்கேஜ் பாதை மூடல் : திருவாரூர்-பட்டுக்கோட்டை ரயிலுக்கு குட் பை on 19 October, 2012 - 06:00 AM | |
திருச்சி: அகலப் பாதை பணிகள் நடக்க உள்ளதையொட்டி, திருவாரூர் முதல் பட்டுக்கோட்டை வரையிலான மீட்டர் கேஜ் ரயில் பாதை இன்று மூடப்படுகிறது. இது தெற்கு ரயில்வேயின் கடைசி மீட்டர்கேஜ் பாதையாகும்.நாடு முழுவதும் ரயில் பாதைகளை அகலப்பாதையாக மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன. தெற்கு ரயில்வேயில் பெரும்பாலான பாதைகள் அகலப் பாதையாக மாற்றப்பட்டுவிட்டன. திருச்சி மற்றும் மதுரை கோட்ட பகுதிகளில் உள்ள காரைக்குடி - திருவாரூர் வரை மீட்டர் கேஜ் பாதையிலேயே ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. சில மாதங்களுக்கு முன்பு காரைக்குடியில் இருந்து, பட்டுக்கோட்டை வரை மீட்டர்கேஜ் பாதை மூடப்பட்டு அகலப்பாதை பணிகள் நடந்து வருகின்றன. |