| அதிகவேக ரயில் வெள்ளோட்டம் by railgenie on 20 February, 2013 - 06:00 AM | ||
|---|---|---|
railgenie | அதிகவேக ரயில் வெள்ளோட்டம் on 20 February, 2013 - 06:00 AM | |
கரூர்: சேலம், நாமக்கல், கரூர் அகலப்பாதையில் வியாழன் காலை 8 மணியளவில் 110 கி.மீ., வேகத்தில் அதிக வேக ரயில் வெள்ளோட்டம் விடப்படும் என ரயில்வேத்துறை அறிவித்துள்ளது. இந்த சோதனையின் போது, பொது மக்கள் யாரும் ரயில்ப்பாதை அருகே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்தப்பாதையில் சரக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதிவேக ரயில் பரிசோதனைக்கு பின்னர், பயணிகள் ரயில் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. | ||