| துரந்தோ ரயில்களுக்கு பயணிகளிடம் வரவேற்பு by nikhilndls on 19 December, 2012 - 03:01 PM | ||
|---|---|---|
nikhilndls | துரந்தோ ரயில்களுக்கு பயணிகளிடம் வரவேற்பு on 19 December, 2012 - 03:01 PM | |
சென்னை: மதுரை, திருவனந்தபுரம், துரந்தோ ரயில்களுக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னை சென்ட்ரலிலிருந்து, மதுரை மற்றும் திருவனந்தபுரத்திற்கு, இம்மாதம், 15ம் தேதி, துரந்தோ ரயில்கள் துவக்கி வைக்கப்பட்டன. இந்த ரயில்களில், நேற்றைய நிலவரப்படி, சென்ட்ரலிலிருந்து மதுரைக்கு இயக்கபடும், துரந்தோ ரயில் வரும், 24ம் தேதி மட்டும் "ஹவுஸ்புல்' ஆகியுள்ளது. மதுரையிலிருந்து, சென்னை சென்ட்ரலுக்கு வரும், 25ம் தேதி இயக்கப்படும், துரந்தோ ரயிலில், "ஏசி' மூன்றாம் வகுப்பு மட்டும், முழுவதுமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வகுப்பில், படுக்கை வசதிக்கு காத்திருப்போர் பட்டியலில், 10 பேர் உள்ளனர். மற்ற நாட்களில், "ஏசி' மூன்றாம் வகுப்பை விட, மற்ற வகுப்புகளில் அதிக இடங்கள், முன்பதிவு செய்யப்படாமல் உள்ளன. சென்னை சென்ட்ரலிலிருந்து, திருவனந்தபுரத்திற்கு, இம்மாதம், 21 மற்றும், 25ம் தேதிகளில் இயக்கப்படும், துரந்தோ ரயிலில், அனைத்து வகுப்புகளும், முன்பதிவு செ#யப்பட்டுள்ளது. | ||