| Electric train test trial in Nellai | நாகர்கோவில் நெல்லை இடையே மின் ரயில் சோதனை ஓட்டம் Dinamalar by Mafia on 15 December, 2012 - 09:00 AM | ||
|---|---|---|
Mafia | Electric train test trial in Nellai | நாகர்கோவில் நெல்லை இடையே மின் ரயில் சோதனை ஓட்டம் Dinamalar on 15 December, 2012 - 09:00 AM | |
திருநெல்வேலி: நெல்லை- நாகர்கோவில் இடையே ரயில்வே பாதையில் வரும் ஜனவரி முதல் தேதியில் இருந்து மின்சார ரயில்கள் ஓடத்துவங்கும் என நெல்லையில் தென்னக ரயில்வே மின்மயமாக்கல் திட்ட முதன்மை அதிகாரி உதயகுமார் தெரிவித்தார் . நெல்லை-நாகர்கோவில் இடையே 82 கி.மீ.,தூரம், மின்மயமாக்கல் பணிகள், 67 கோடி ரூபாய் செலவில் கடந்த ஒரு ஆண்டாக நடந்தது. இந்த வழித்தடத்தில் மின் ரயில்கள் இயக்குவதற்கு முந்தைய ஆய்வினை இன்று தென்னக ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் எஸ்.கே. மிட்டல், தென்னக ரயில்வே மின்மயமாக்கல் திட்ட முதன்மை அதிகாரி உதயகுமார், திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட மேலாளர் ராஜேஷ் அகர்வால் ஆகியோர் மேற்கொண்டனர். நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து சோதனை ஓட்ட ரயில், தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் நடந்து முடிந்த மின்மய பாதையில் கிளம்பி நாகர்கோவில் வரை சென்றது. தென்னக ரயில்வே மின்மயமாக்கல் திட்ட முதன்மை அதிகாரி உதயகுமார் கூறுகையில் , "மின்மய பணிகள் திருநெல்வேலி முதல் நாகர்கோவில் வரை மூவாயிரம் மின்கம்பங்களுடன் முழுமையாக முடிந்துள்ளது. தற்போதைய ஆய்வுக்கு பின், ஜனவரி முதல் தேதியில் இருந்து மின்சார ரயில்கள் இயக்கப்படும். முதற்கட்டமாக சரக்கு ரயில்கள் இயக்கப்படும் அதை தொடர்ந்து பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் பயணிகள் ரயிலும் மின்சாரத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லை-நாகர்கோவிலை தொடர்ந்து, திண்டுக்கல்-மதுரை-விருதுநகர் மின்பாதையில் பிப்ரவரியில் இயங்கும். தொடர்ந்து விருதுநகர்-நெல்லை, விருதுநகர்-தூத்துக்குடி மின்பாதையில் ரயில்கள் ஜூன் மாதத்தில் இயக்கப்படும்" என்றார் | ||