Indian Railways News => | Topic started by railgenie on Sep 23, 2012 - 12:00:46 PM |
Title - நிர்ணயிக்கப்பட்ட விலைதான் கொள்முதல் விலையாம் அநியாய விலைக்கு ‘ரயில் நீர்’ விற்பனைPosted by : railgenie on Sep 23, 2012 - 12:00:46 PM |
|
சென்னை: ரயில்வே நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு ‘ரயில் நீர்’ விற்கப்படுகிறது. இதுகுறித்து புகார் கூறியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பயணிகள் கூறுகின்றனர். ரயில் நிலையங்களில் தனியார் நிறுவனங்களின் தண்ணீர் விற்பனை தடை செய்யப்பட்டு அதற்கு பதிலாக 2 ஆண்டுகளாக Ôரயில்நீர்Õ விற்கப்படுகிறது. இதற்காக ரயில்வே நிறுவனமான இந்தியன் உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின்(ஐஆர்சிடிசி) சார்பில் செங்கல்பட்டு அருகே பாலூரில் தண்ணீர் சுத்திகரிப்பு தொழிற்சாலை அமைத்துள்ளது. |