Indian Railways News => | Topic started by irmafia on Nov 28, 2012 - 09:00:51 AM |
Title - திருப்பதி - ராமேஸ்வரம் ரயில் இயக்க வலியுறுத்தல்Posted by : irmafia on Nov 28, 2012 - 09:00:51 AM |
|
காரைக்குடி:ரயில்வே திட்டங்களை பெற தென் தமிழக பார்லிமென்ட் உறுப்பினர்களுடன், தொழில் வணிக கழகத்தினர் கலந்தாய்வு கூட்டம் மதுரையில் நடந்தது.காரைக்குடி தொழில் வணிக கழகம் சார்பில் சாமி திராவிட மணி பேசியதாவது:1928ல் தொடங்கிய திருச்சி - ராமேஸ்வரம் ரயில் பாதையில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமே சென்னை செல்கிறது. புதிய ரயில் இதுவரை அறிவிக்கப்படவில்லை. காரைக்குடி, சிவகங்கை பகுதி புறக்கணிக்கப்படுகிறது. எனவே, திருப்பதி - ராமேஸ்வரம், நாகூர் -ராமேஸ்வரம், சென்னைக்கு மேலும் ரயில்கள் இயக்க வேண்டும்.ஓடிக்கொண்டிருந்த கோவை - ராமேஸ்வரம் ரயிலை, நிரந்தரமாக இயக்க வேண்டும், காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர் அகல பாதை பணிகள் விரைவாக நடக்க வேண்டும் என, பேசினார். |