Indian Railways News => Topic started by Mafia on Sep 10, 2013 - 14:56:10 PM


Title - தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்தது: கோவை ரெயில்கள் 1½ மணி நேரம் தாமதம்
Posted by : Mafia on Sep 10, 2013 - 14:56:10 PM

கோவை, செப். 10–

சேலத்தில் இருந்து நேற்று இரவு 9 மணி அளவில் புறப்பட்ட லாரி ஓமலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. கருப்பூர் ரெயில்வே மேம்பாலத்தில் சென்றபோது லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. திடீரென்று பாலத்தின் தடுப்பு சுவரை இடித்துக்கொண்டு தண்டவாளத்தில் விழுந்தது.

அந்த சமயத்தில் கன்னியாகுமரி–மும்பை ரெயில் அந்த வழியாக வந்து கொண்டிருந்தது. இதைப்பார்த்த பாலு என்பவர் டார்ச்லைட்டை அடித்தபடி ஓடிச்சென்று ரெயிலை நிறுத்தினார். விபத்து காரணமாக ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன.

லாரி தண்டவாளத்தில் விழுந்து கிடந்ததால் சென்னையில் இருந்த கோவைக்கு வரும் ரெயில்களும் தாமதமாகவே வந்து சேர்ந்தன. சென்னையில் இருந்து புறப்படும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை 4.45 மணிக்கு கோவை வந்து சேரும். ஆனால் அந்த ரெயில் இன்று 1½ மணி நேரம் தாமதமாக காலை 6.15 மணிக்குத்தான் கோவை வந்து சேர்ந்தது.

சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 6 மணிக்கு கோவை வந்து சேரும். ஆனால் அந்த ரெயில் இன்று காலை 7.30 மணிக்குத்தான் வந்தது. இதேபோல் 5.15 மணிக்கு வரவேண்டிய கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் 6.45 மணிக்கும், 5.45 மணிக்கு வரவேண்டிய ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் 7 மணிக்கும் கோவை வந்து சேர்ந்தது.

கோவையில் இருந்து சென்னைக்கு செல்லும் ரெயில்களும் தாமதாமாகவே சென்று சேர்ந்தன.