Indian Railways News => | Topic started by railgenie on Jul 17, 2012 - 15:00:30 PM |
Title - கரூர்,சேலம் புதிய பாதையில் ஆகஸ்ட்டில் ரயில்கள் இயக்கம்Posted by : railgenie on Jul 17, 2012 - 15:00:30 PM |
|
கரூர் :ஈரோடு ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து எரியோடு ரயில்வே ஸ்டேஷன் வரை உள்ள சிறிய ரயில் நிலையங்கள், இருப்புப் பாதைகளை ஆய்வு செய்யும் பணி நேற்று நடந்தது. பின்னர் சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் சுஜாதா நிருபர்களிடம் கூறியதாவது: கரூர் , சேலம் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. கரூரில் இருந்து சேலம் வரையில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சிக்னல் அமைக்கும் பணிகள் இம்மாத இறுதிக்குள் அல்லது ஜூலை 15ம் தேதிக்குள் நிறைவுபெறும். பின்னர் மத்திய பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்வார். அதன்பிறகு முதலில் சரக்கு ரயில்கள் இயக்கப்படும். பின்னர் பயணிகள் ரயில்கள் இயக்கப்படும். ஆகஸ்ட் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் நிறைவுபெற்று விடும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். |