Indian Railways News => Topic started by riteshexpert on Jul 17, 2012 - 15:18:29 PM


Title - உம்மன்சாண்டி தொடங்கி வைத்தார் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு |- Dinakaran
Posted by : riteshexpert on Jul 17, 2012 - 15:18:29 PM

திருவனந்தபுரம்:  திருவனந்தபுரம்&மங்களூர் இடையே தினமும் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது. திருவனந்தபுரத்தில் இருந்து தினமும் காலையில் 6.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில்(எண் 16650) இரவு  9.30 மணியளவில் மங்களூரை அடையும். மங்களூரிலிருந்து (எண் 16649) அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணியளவில் திருவனந்தபுரத்தை அடையும்.  இந்த ரயில் நாகர்கோவில் வரை நீட்டிக்கப்படும் என ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, இந்த ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பதற்கான விழா திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று மாலை நடந்தது.  கேரள முதல்வர் உம்மன்சாண்டி தொடங்கி வைத்தார். திருவனந்தபுரத்தில் இருந்து தினமும் மாலை 6.40 மணிக்கு புறப்படும் இந்த ரயில், இரவு 8.40மணிக்கு நாகர்கோவிலை அடைகிறது.  நாகர்கோவிலில் இருந்து தினமும் அதிகாலை 4மணிக்கு இந்த ரயில் புறப்படும். காலை  6.15மணிக்கு திருவனந்தபுத்தை அடைகிறது. அங்கிருந்து 6.25 க்கு மங்களூர் புறப்பட்டு செல்கிறது.