Rs.220 crore allocated for salem railway route | சேலம்- மேட்டூருக்கு இருவழி அகல ரயில் பாதை ரூ.220 கோ by riteshexpert on 30 November, 2012 - 03:00 AM | ||
---|---|---|
riteshexpert | Rs.220 crore allocated for salem railway route | சேலம்- மேட்டூருக்கு இருவழி அகல ரயில் பாதை ரூ.220 கோ on 30 November, 2012 - 03:00 AM | |
""சேலத்திலிருந்து மேட்டூருக்கு, இருவழி அகல ரயில்பாதை அமைக்கும் திட்டத்துக்கு, 220 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,'' என, தென்னக ரயில்வே கட்டுமானப் பிரிவு, முதன்மை பொறியாளர் நந்தகுமார் தெரிவித்தார். சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகாவில், அனல் மின் நிலையம், இரும்பு உருக்கு ஆலைகள், மால்கோ, கெம்ப்ளாஸ்ட் போன்ற தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளுக்கு, சரக்கு ரயில்கள் மூலம் நிலக்கரி உள்ளிட்ட மூலப் பொருட்கள் கொண்டு வரப்படுகிறது. இதில், சேலம்- மேட்டூர் வரையான, ஒருவழி அகல ரயில் பாதையில், பயணிகள் ரயில் வரும் போது, சரக்கு ரயில் செல்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அதனால், சேலம்- மேட்டூர் வழித்தடத்தை, இருவழி அகல ரயில் பாதையாக மாற்றும்படி, மத்திய ரயில்வே துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதையடுத்து, சேலத்திலிருந்து மேட்டூர் வரை, இருவழி அகல ரயில்பாதை அமைக்கும் திட்டத்துக்கு, 220 கோடி ரூபாய், மத்திய ரயில்வேதுறை ஒதுக்கீடு செய்துள்ளது. கரூர்- நாமக்கல் அகல ரயில்பாதை பணி முடிந்துள்ளதால், அதில் ஈடுபட்ட பணியாளர்கள், சேலம்- மேட்டூர் வரையான, இருவழி அகல ரயில்பாதை அமைக்கும் பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். |