Indian Railways News => Topic started by greatindian on Jul 02, 2013 - 18:02:17 PM


Title - New Time Table for Puducherry Trains
Posted by : greatindian on Jul 02, 2013 - 18:02:17 PM

புதுவை ரயில்கள் புதிய அட்டவணை

புதுச்சேரி, ஜூலை 2:

புதுவையில் இருந்து புறப்படும் 2 எக்ஸ்பிரஸ் ரயில் கள் மற்றும் சென்னையில் இருந்து புதுவை வரும் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவற்றின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

புதுவையில் இருந்து வாரந்தோறும் செவ்வாய், புதன், ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மும்பை தாதருக்கு செல்லக்கூடிய புதுச்சேரி& தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்.11006) வழக்கமாக இரவு 8.15 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும். இனி இந்த ரயில் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

புதுச்சேரியில் இருந்து யஷ்வந்த்பூருக்கு சனிக்கிழமை தோறும் செல்லும் ஹரிபிரத் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்.12255) வழக்கமாக இரவு 10 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு செல்லும். இனி இந்த ரயில் 1 மணி நேரம் முன்கூட்டியே, அதாவது இரவு 9 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு செல்லும். சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு தினசரி இரவு 10 மணிக்கு வந்து சேரும் சென்னை&புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில், இனிமேல், இரவு 10.30 மணிக்கு வந்து சேரும். மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து தினசரி மாலை 6 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மாலை 6.30 மணிக்கு புறப்படும்.

இந்த தகவலை புதுச்சேரி ரயில் நிலைய மேலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.