Indian Railways News => | Topic started by irmafia on Dec 14, 2012 - 18:01:09 PM |
Title - Nellai - Lokmanya Tilak weekly special trains | நெல்லை-லோக்மான்யதிலக் வாராந்திர சிறப்பு ரயில்கள் DinPosted by : irmafia on Dec 14, 2012 - 18:01:09 PM |
|
மதுரை: பயணிகள் நெரிசலை தவிர்க்க நெல்லை- மும்பை லோக்மான்யதிலக் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. லோக்மான்யதிலக் ஸ்டேஷனில் டிச., 15, 22, 29 சனிக்கிழமைகளில் மாலை 4.55 மணிக்கு புறப்படும் ரயில், 17, 24, 31 காலை 5.05 மணிக்கு நெல்லை செல்லும். நெல்லையில் டிச., 17, 24, 31ல் பகல் 1 மணிக்கு புறப்படும் ரயில், லோக்மான்ய திலக் ஸ்டேஷனுக்கு 18, 25, பிப்., 1 இரவு 11.45க்கு செல்லும். ஒரு "ஏசி' 2 அடுக்கு, 2 "ஏசி' மூன்றடுக்கு, 11 சிலீப்பர் பொது பெட்டிகள், 3 சரக்கு பெட்டி இணைந்த பொதுபெட்டிகள் இணைக்கப்படும். ரயில்கள் வள்ளியூர், நாகர்கோவில், குழித்துறை, நெய்யாற்றின்கரா, திருவனந்தபுரம், வர்க்கலா, கொல்லம், செங்கனூர், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, தலசேரி, கண்ணனூர், உடுப்பி, குண்டப்பூர், ரத்னகிரி, தானே போன்ற ஸ்டேஷன்களில் நிற்கும். |