| Indian Railways News => | Topic started by riteshexpert on Oct 15, 2012 - 03:00:30 AM |
Title - district news | ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில்Posted by : riteshexpert on Oct 15, 2012 - 03:00:30 AM |
|
|
ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் வசதிக்காக வைக்கப்பட்டிருந்த, "தொடு திரை கணினி', திடீரென மாயமானதால், தகவலை பார்க்க முடியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர். ரயில் பயணிகள் வசதிக்காக முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களில் பல கோடி ரூபாய் செலவில், தொடு திரை கணினி வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் கவுன்டர் அருகே இரண்டு தொடு திரை கணினிகளும், பிளாட்ஃபார்ம் ஒன்றில் ஒரு தொடு திரை கணினியும் வைக்கப்பட்டிருந்தன.அதில், ரயில் நிலை, பி.என்.ஆர்., நிலை (காத்திருப்போர் பட்டியல்), பெட்டியின் நிலை, கால அட்டவணை, முன்பதிவு நிலவரம், கட்டணம், சிறப்பு ரயில்கள், இரண்டு நிலையங்கள் இடையே ஓடுகின்றன ரயில்கள், சுற்றுலா இடங்கள், ரயில் நிலையத்தில் கிடைக்கும் வசதிகள் உள்பட பல தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இது, 24 மணி நேரமும் செயல்படும்.பொதுவாக டிக்கெட் கட்டணம், பி.என்.ஆர்., நிலை, சிறப்பு ரயில்கள் உள்பட பல வசதிகளை பயணிகள் பார்ப்பது வழக்கம். தாங்கள் பயணிக்கும் ரயில், தற்போது எந்த ஸ்டேஷனை கடந்துள்ளது என்பது வரையிலும் பார்த்து கொள்கின்றனர்.இரண்டு ஆண்டுக்கு முன் பதிவு செய்யப்பட்ட தகவலை மட்டுமே தொடு திரை கணினி காட்டி வந்தது. புதிதாக அறிவிக்கப்படும் ரயில்கள் குறித்து எந்த தகவலும் அதில் இருப்பதில்லை. பயணிகள் பல முறை தகவலுக்காக முயற்சி செய்தாலும், "மன்னிக்கவும்; தேவையான தகவல் இல்லை; மீண்டும் முயற்சிக்கவும்' என, காட்டி வந்தது.முக்கியமான நேரங்களில் தகவல் கிடைக்காமல் பயணிகள் டென்ஷன் ஆகி, அங்குள்ள ஊழியர்களிடம் தகராறு செய்வதும் வழக்கமான ஒன்றாக இருந்தது. தற்போது ஒரு தொடுதிரை கணினி ரிப்பேராக இருந்தது. அதை சரி செய்ய எடுத்து சென்றனர். அதன்பின் தொடர்ச்சியாக இரண்டு தொடு திரை கணினிகளும் பழுதானது. அதுவும் தற்போது ரயில்வே ஸ்டேஷனில் காணவில்லை. பயணிகள் ரயில்களின் நிலை குறித்து தேவையான எந்த தகவலையும் பார்த்து தெரிந்து கொள்ள முடியாமல் பயணிகள் பெரிதும் அவதியுறுகின்றனர்.பயணிகள் கூறியதாவது:தமிழக அளவில் பயணிகளிடம் ரயில்வே பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளது. வருவாய் ஈட்டி தருவதில் தமிழகம் முன்னிலை மாநிலமாக இருந்தும், ஏற்படும் இடர்பாடுகள் குறித்து எந்த புகாரும் ரயில்வே அதிகாரிகளுக்கு நேரிடையாக அளிப்பதில்லை. அதிகாரிகளும் புகார் இல்லை என்று கூறி நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டுகின்றனர்.சிறிய ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள தொடுதிரை கணினி கூட, சிறந்த முறையில் பணியாற்றி வருகிறது. ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் மாதக்கணக்கில் தொடுதிரை கணினி ரிப்பேராக இருந்தது. தற்போது அதுவும் மாயமாகி விட்டது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர் |