Indian Railways News => Topic started by puneetmafia on Oct 01, 2012 - 12:00:46 PM


Title - இன்று முதல் அக்.12 வரை பாண்டியன், வைகை ரயில்கள் கூடல்நகரிலிருந்து இயக்கம்
Posted by : puneetmafia on Oct 01, 2012 - 12:00:46 PM

மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பாண்டியன், வைகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்றுமுதல் கூடல்நகர் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது.
மதுரை ரயில் நிலையம் மேம்பாட்டு பணிகள் இன்று துவங்குகிறது. இதனால், மதுரையிலிருந்து சென்னை செல்லும், பாண்டியன் எக்ஸ்பிரஸ் இன்று முதலும், வைகை எக்ஸ்பிரஸ் நாளை முதலும் கூடல்நகர் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது. அதே போல் சென்னையில் இருந்து வரும் இந்த இரு ரயில்களும் கூடல்நகரோடு நிறுத்தப்படும். இதன்படி நேற்று சென்னையில் இருந்து வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் பயணிகள் இன்று கூடல்நகரில் இறங்கி சென்றனர். அதேபோல் இன்று இரவு வரும் வைகையும் அங்கேயே நிறுத்தப்படும். இந்த நடைமுறை அக்டோபர் 12ம் தேதி வரை அமலில் இருக்கும்.இந்த மாற்றத்தின் காரணமாக கூடல்நகர் ரயில் நிலையத்தில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை ரயில் நிலையத்திலிருந்து கூடல்நகருக்கு காலை 5, 8 மணிக்கும், மாலையில் 6, 10 மணிக்கும் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகிறது.