Indian Railways News => Topic started by puneetmafia on Oct 02, 2013 - 00:00:28 AM


Title - ரெயில்வே அதிகாரிகளை முற்றுகையிட்ட பயணிகள்: ஹெலன் டேவிட்சன் எம்.பி.யும் ஆவேசம்
Posted by : puneetmafia on Oct 02, 2013 - 00:00:28 AM

நாகர்கோவில் ரயில்நிலையத்தில் பலமணிநேரம் ரயிலின்றி தவித்த தமிழகப்  பயணிகள் ரயில்வே அதிகாரிகளை முற்றுகை இட்டனர். பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ஹெலன் டேவிட்சன் அவர்களும் கலந்துகொண்டார்.
ரெயில்வே அதிகாரிகளை முற்றுகையிட்ட பயணிகள்: ஹெலன் டேவிட்சன் எம்.பி.யும் ஆவேசம்
பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, செப்டம்பர் 28, 6:12 PM IST  கருத்துக்கள்0வாசிக்கப்பட்டது1 Share/Bookmark printபிரதி
ரெயில்வே அதிகாரிகளை முற்றுகையிட்ட பயணிகள்: ஹெலன் டேவிட்சன் எம்.பி.யும் ஆவேசம்
கோட்டார் ரெயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரம் மார்க்கமாக செல்லும் குருவாயூர் மற்றும் மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமானாலும் அங்கு புறப்பட்டு சென்றதால் அந்த வழியாக கேரளா செல்லும் பயணிகள் அந்த ரெயில்களில் ஏறிச்சென்று விட்டனர்.

ஆனால் திருநெல்வேலி மார்க்கமாக செல்ல வேண்டிய பயணிகளுக்கு ரெயில்வே அதிகாரிகள் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. இதனால் நெல்லை மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்களில் வேலைக்கு செல்லும் ஊழியர்கள் பெரிதும் அவதிக்கு ஆளானார்கள்.

அவர்கள், ரெயில்வே அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தகவல் அறிந்து ஹெலன்டேவிட்சன் எம்.பி.யும் ரெயில்நிலையத்திற்கு வந்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்கள் உயர் அதிகாரிகளை தொடர்பு கொள்ளும்படி கூறியதால் அவர், திருவனந்தபுரத்தில் உள்ள உயர் அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டார்.

ஆனால் எந்த அதிகாரியையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுபற்றி ஹெலன் டேவிட்சன் எம்.பி. கூறியதாவது:–

கோட்டார் ரெயில் நிலைய பிரச்சினைகளை பேசி தீர்க்க பலமுறை முயற்சி மேற்கொண்டு வருகிறோம். ஆனால் உயர் அதிகாரிகள் இதற்கு ஒத்துழைப்பு அளிப்பது இல்லை. இதனால் பயணிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

அதிகாரிகள் ஒத்துழைததால்தான் பிரச்சினை முடிவுக்கு வரும். இதுபற்றி மீண்டும் நான் உயர் அதிகாரிகளை சந்தித்து புகார் செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.