Indian Railways News => Topic started by nikhilndls on Oct 01, 2013 - 03:00:11 AM


Title - பழநி சென்னை ரயில் நாளை முதல் இயக்கம்
Posted by : nikhilndls on Oct 01, 2013 - 03:00:11 AM

சேலம்:கரூர் அகல ரயில் பாதையில், பழநி சென்னை இடையிலான ரயில் சேவை, நாளை (அக்., 1) முதல் துவங்குகிறது.

கடந்த மே 25 முதல், சேலம் கரூர் ரயில் பாதையில், சேலம் கரூருக்கு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. சேலம் கோட்ட ரயில்வே வர்த்தக முதுநிலை மேலாளர் தாமோதரன், ராஜ்யசபா எம்.பி., ராமலிங்கம் ஆகியோர், நேற்று, ராசி புரம் ரயில்வே ஸ்டேஷனில், இதற்கான ஆய்வுகளை மேற்கொண்டனர்.

ஸ்டேஷனில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதி, இருக்கை வசதி, குடிநீர், முன்பதிவு மையம், பார்சல் சேவை, பயணிகள் ஓய்வு அறை உள்ளிட்ட வசதிகளை பார்வையிட்டனர்.அதற்குப்பின் , எம்.பி., ராமலிங்கம் கூறியதாவது:

சேலம் கரூர் அகல ரயில் பாதையில், அக்., 1 ல் (நாளை) முதல், பழநி சென்னைக்கும், அக்., 2 முதல், சென்னை பழநி இடையே புதிய விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தினமும் இயக்கப்படும் இந்த ரயில்கள், ராசிபுரம், நாமக்கல் ஸ்டேஷன்களில் நின்று செல்லும். இரு மார்க்கமாக இயக்கப்படும் இந்த ரயில், பழநியில் மாலை, 6:00 மணிக்கு புறப்பட்டு, நாமக்கல்லுக்கு இரவு, 9:00 மணிக்கும், ராசிபுரம் ஸ்டேஷனுக்கு, 9:30க்கும், சேலத்துக்கு, 10:00 மணிக்கும், சென்னைக்கு அதிகாலை, 4:50 மணிக்கு சென்றடையும்.

அதே போல், மறு மார்க்கத்தில், சென்னையில் இரவு, 9:00 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை, 4:00 மணிக்கு சேலம், 4:30க்கு ராசிபுரம், 5:00 மணிக்கு நாமக்கல் வழியாக கரூர், திண்டுக்கல் சென்று, காலை, 8:00 மணிக்கு பழநி சென்றடையும். நாகர்கோவில் - பெங்களூரு விரைவு ரயில், விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.