Indian Railways News => Topic started by puneetmafia on Oct 06, 2013 - 02:59:25 AM


Title - காட்பாடி மார்க்கத்தில் ரயிலின் வேகம் அதிகரிப்பு
Posted by : puneetmafia on Oct 06, 2013 - 02:59:25 AM

காட்பாடி மார்க்கத்தில் ரயிலின் வேகம் அதிகரிப்பு
விழுப்புரம், ஆக. 15&
விழுப்புரம் & காட்பாடி இடையே 160 கி.மீ தூரத்துக்கு ரூ.500 கோடி மதிப்பில் அகல ரயில் பாதை அமைக்கும் பணி 2007ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நீண்ட இழுபறிக்கு பிறகு அகல ரயில் பாதை அமைக்கும் பணி முடிக்கப்பட்டு ரயில் போக்குவரத்து கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கியது. அகல ரயில் பாதையில் முதல் ரயில் சேவையாக மதுரை & திருப்பதி விரைவு ரயில் இயக்கப்பட்டது.
அதன்பிறகு, பயணிகள் ரயில், புருலியா, கரக்பூர் உள்பட பல விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 50 கி.மீ வேகத்துக்கு ரயில்கள் இயக்கப்பட்டது. ரயிலின் வேகத்தை அதிகரிக்க பயணிகள் வலியுறுத்தினர்.
அதன்பேரில், முதன்மை பாதுகாப்பு ஆணையர் உள்பட உயர் அதிகாரிகள் குழு பல்வேறு கட்டங்களாக ஆய்வு செய்தது. இந்த ஆய்வு வெற்றி பெற்றதையடுத்து ரயிலின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் & காட்பாடி இடையே 80 கி.மீ வேகத்துக்கு ரயில்கள் கடந்த 2 நாட்களாக இயக்கப்பட்டு வருகிறது.