Indian Railways News => Topic started by railgenie on Sep 23, 2012 - 12:00:46 PM


Title - நிர்ணயிக்கப்பட்ட விலைதான் கொள்முதல் விலையாம் அநியாய விலைக்கு ‘ரயில் நீர்’ விற்பனை
Posted by : railgenie on Sep 23, 2012 - 12:00:46 PM

சென்னை: ரயில்வே நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு ‘ரயில் நீர்’ விற்கப்படுகிறது. இதுகுறித்து புகார் கூறியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பயணிகள் கூறுகின்றனர். ரயில் நிலையங்களில் தனியார் நிறுவனங்களின் தண்ணீர் விற்பனை தடை செய்யப்பட்டு அதற்கு பதிலாக 2 ஆண்டுகளாக Ôரயில்நீர்Õ விற்கப்படுகிறது. இதற்காக ரயில்வே நிறுவனமான இந்தியன் உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின்(ஐஆர்சிடிசி) சார்பில்  செங்கல்பட்டு அருகே பாலூரில் தண்ணீர் சுத்திகரிப்பு தொழிற்சாலை அமைத்துள்ளது.
ஒரு லிட்டர் தண்ணீரை 12 ரூபாய்க்கு விற்பது என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ரயில்நிலையங்களில் உள்ள தனியார் விற்பனையாளர்களும், ரயில்களில் உணவு வினியோகிக்கும் குத்தகைதாரர்களும் ஒரு லிட்டர் தண்ணீரை 15 ரூபாய்க்கு விற்கின்றனர். Ôபாட்டிலில் 12 ரூபாய் என்றுதான் போட்டுள்ளது’ என சுட்டிக்காட்டி கேட்டால், Ôஅது எங்களுக்கு விற்கும் விலை. நாங்கள் லாபம் வைத்து விற்றால் தானே பிழைக்க முடியும்Õ என்கிறார்கள். இன்னும் சிலர், Ôகூலிங் இருந்தால் 15 ரூபாய். கூலிங் இல்லாவிட்டால்தான் 12 ரூபாய்Õ என ஏமாற்றுவதாக பயணிகள் கூறுகின்றனர். இதனால் சில சமயம் பயணிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. இந்த அநியாய விற்பனை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் அன்றாட காட்சியாக நடக்கிறது. இதுபற்றி பயணிகள் புகார் கூறியும், ஐஆர்சிடிசி நிர்வாகமும், ரயில்வே அதிகாரிகளும் வழக்கம் போல் கண்டு கொள்ளாமல் இருப்பதாக பயணிகள் புலம்புகின்றனர்.