Indian Railways News => Topic started by riteshexpert on Feb 01, 2013 - 03:00:43 AM


Title - SR-PENDING TRAINS
Posted by : riteshexpert on Feb 01, 2013 - 03:00:43 AM

மத்திய ரயில்வே பட்ஜெட்டில், கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட, சென்னை சென்ட்ரல் - பெங்களூரு இரண்டடுக்கு, "ஏசி' ரயில் உட்பட, முக்கிய நகரங்கள் இடையே, மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் 14 பாசஞ்சர் ரயில்கள், இன்னும் இயக்கப்படவில்லை.

நிறைவேற்றப்படுமா?


அடுத்த ரயில்வே பட்ஜெட், அடுத்த மாதம், 26ம் தேதி தாக்கலாக உள்ள நிலையில், பழைய அறிவிப்புகள் நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கடந்தாண்டு ரயில்வே பட்ஜெட்டில், சென்னை சென்ட்ரல் - பெங்களூரு இடையே, இரண்டு அடுக்கு "ஏசி' எக்ஸ்பிரஸ் ரயில் (டபுள் டெக்கர்) இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரயிலுக்கான பெட்டிகள் தயாரிப்பு தாமதமாகியுள்ளதால், பட்ஜெட்டுக்கு முன், இந்த ரயிலை இயக்க வா#ப்பில்லை என, கூறப்படுகிறது.

பாசஞ்சர் ரயில்கள்:


மதுரையிலிருந்து, ஆந்திராவில் உள்ள காச்சிக்குடாவிற்கு, வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலும், கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூரிலிருந்து, கேரள மாநிலம் கொச்சுவேலிக்கு, "ஏசி' எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரயில்கள் இன்னும் இயக்கப்படவில்லை. விழுப்புரம் - காட்பாடி, மயிலாடுதுறை - திருவாரூர், திருநெல்வேலி - செங்கோட்டை இடையே, தினசரி தலா, இரண்டு ஜோடி பாசஞ்சர் ரயில்கள், விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே, ஒரு ஜோடி பாசஞ்சர் ரயில்களும் இயக்கப்படும் என, ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.கேரள மாநிலத்தில், திருச்சூர் - எர்ணாகுளம் மற்றும் பாலக்காடு - ஈரோடு இடையே, தலா ஒரு ஜோடி பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படும் என்ற அறிவிப்பும் நிறைவேறவில்லை.

நீட்டிக்கப்படாத ரயில்கள்:


சென்னை - டேராடூன், வாராந்திர எக்ஸ்பிரஸ், மதுரை வரை நீட்டிக்கப்படும் எனவும், கன்னியாகுமரி - புதுடில்லி இடையே இயக்கப்படும் வாராந்திர, திருக்குறள் எக்ஸ்பிரஸ் இரண்டு நாட்கள் இயக்கப்படும் எனவும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.திருவனந்தபுரம் - பெங்களூரு இடையே, வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், தினசரி ரயிலாக மாற்றப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இவையும், அறிப்பாகவே உள்ளது.

இந்த ஆண்டிலாவது?


விழுப்புரம் - கோரக்பூர் இடையே, வாரத்தில் ஒரு நாள் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், இரண்டு நாட்கள் இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தும், இரண்டு நாட்களாக இன்னும் மாற்றப்படவில்லை.கடந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரயில்கள் இயக்கம், தாமதமாகி உள்ள நிலையில், இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு உரிய முக்கியத்துவம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.