Indian Railways News => Topic started by eabhi200k on Dec 03, 2012 - 06:00:46 AM


Title - அரக்கோணம் காட்பாடி இடையே ரெயில் தண்டவாளத்தில் இரும்புகம்பி: சென்னை ரெயில் தப்பியது || Iron wire on r
Posted by : eabhi200k on Dec 03, 2012 - 06:00:46 AM

அரக்கோணம், டிச.2-

சென்னையில் இருந்து வேலூர் மாவட்டம் அரக்கோணம், காட்பாடி வழியாக ஹுப்ளி செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை 3.50 மணியளவில் தலங்கை ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது என்ஜின் முன்பு உள்ள கவுகேட்ச் இரும்பு சட்டத்தில் சுமார் 5 அடி நீளம் உள்ள பழைய சிலீப்பர் கட்டையில் உபயோகப்படுத்தும் இரும்புகம்பி பட்டு ரெயில் சென்ற வேகத்தில் டமால் என்ற சத்தத்துடன் அருகில் உள்ள இருப்பு பாதைகளுக்கு இடையே சென்று விழுந்தது.

இதன் காரணமாக உடனடியாக அந்த ரெயில் நிறுத்தப்பட்டது. என்ஜின் டிரைவர், கார்டு ஆகியோர் அந்த பகுதியில் இரும்புகம்பி எங்கே விழுந்தது என தேடிப் பார்த்தனர். ஆனால் இரும்புகம்பி கிடைக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து கார்டு அரக்கோணம் ரெயில் நிலையம் மற்றும் மகேந்திரவாடி, காட்பாடி ரெயில் நிலையத்தில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் 4.10 மணியளவில் ஹுப்ளி எக்ஸ்பிரஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. அசம்பாவிதம் இன்றி அந்த ரெயில் தப்பியது.

இதன் காரணமாக சென்னையில் இருந்து கோவை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் தலங்கை ரெயில் நிலையம் அருகே சுமார் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு அதன் பின்னர் சென்றது.

சம்பவ இடத்திற்கு அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சென்று விசாரணை நடத்தினர். தண்டவாளத்திற்கு இடையே இரும்புகம்பி வைத்தது நாசவேலையா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்