Indian Railways News => Topic started by Mafia on Nov 16, 2012 - 18:00:16 PM


Title - Salem-karur train transport begins | சேலம் - கரூர் சரக்கு ரயில் போக்குரவத்து துவக்கம் : மக்கள் உற்சா
Posted by : Mafia on Nov 16, 2012 - 18:00:16 PM

சேலம்:சேலம்-கரூர் இடையிலான சரக்கு ரயில் போக்குவரத்து, நேற்று துவங்கியது. வழி நெடுகிலும், மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கடந்த, 1997ல், சேலம்-கரூர் இடையேயான, 87 கிலோ மீட்டர் தூரத்திற்கு அகல ரயில்பாதை அமைக்கும் திட்டம், 630 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் துவங்கப்பட்டது. இப்பணிகள் அனைத்தும், ஓராண்டுக்கு முன்பே நிறைவடைந்த நிலையில், மூன்று முறை சரக்கு ரயில் வெள்ளோட்டம் விடப்பட்டு, பரிசோதனையும் செய்யப்பட்டது. இந்நிலையில், சேலம்-கரூர் இடையிலான சரக்கு போக்குவரத்து, நேற்று துவங்கியது. ஆந்திரா மாநிலம் படுகபாடு ரயில் நிலையத்தில் இருந்து, திருநெல்வேலிக்கு, 5,130 டன் சிமென்டை, 59 வேகன்களில் ஏற்றி வந்த சரக்கு ரயில், நேற்று சேலம் வந்தது. இந்த சரக்கு ரயில், முதன் முதலாக, சேலம்-கரூர் ரயில் பாதையில், நேற்று திருப்பி விடப்பட்டது. சேலம்-கரூர் சரக்கு ரயில் போக்குவரத்தை, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுஜாதா ஜெயராஜ் கொடியசைத்து, துவக்கி வைத்தார். சரக்கு ரயிலுக்கு, வழி நெடுகிலும் உள்ள மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோட்ட மேலாளர் சுஜாதா, நிருபர்களிடம் கூறியதாவது: சேலம்-கரூர் ரயில் பாதையில், சரக்கு ரயில் போக்குவரத்து முழுமையாக தொடங்குகிறது. பயணிகள் ரயில் போக்குவரத்து துவங்குவது குறித்து, தெற்கு ரயில்வே கமிஷனர் ஆய்வு நடத்தியபின், முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கனவே ரயில் வெள்ளோட்டத்தின் போது, விபத்து நடந்துள்ளதால், கரூர் ரயில் பாதையில் உள்ள பகுதிகளில் எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது.