| Minister for the train to Tirupati | திருமலைக்கு ரயில்அமைச்சர் உறுதி Dinamalar by Mafia on 18 November, 2012 - 09:00 PM | ||
|---|---|---|
Mafia | Minister for the train to Tirupati | திருமலைக்கு ரயில்அமைச்சர் உறுதி Dinamalar on 18 November, 2012 - 09:00 PM | |
கர்நூல்:""திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ள திருமலைக்கு, ரயில் வசதி ஏற்படுத்த பாடுபடுவேன்,'' என, ரயில்வே இணை அமைச்சர், சூரியபிரகாஷ் ரெட்டி கூறினார்.ஆந்திர மாநிலம், கர்நூல் மற்றும் கடப்பா மாவட்டங்களில் உள்ள, பிரபலமான கோவில்களில், நேற்று முன் தினம் சாமி தரிசனம் செய்த, அமைச்சர் ரெட்டி கூறியதாவது:பயணிகள் ரயில் கட்டணத்தை, கிலோ மீட்டருக்கு, ஐந்து முதல், 10 காசு உயர்த்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆந்திராவில் ரயில்வே திட்டங்களை செயல்படுத்த, 30 ஆயிரம் கோடி ரூபாய் தேவை. படிப்படியாக இத்திட்டங்களை நிறைவேற்ற முயற்சி செய்வேன்.திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக, ரயில் வசதி ஏற்படுத்தித் தரவும், அதற்கான ரயில் பாதைகள் அமைக்கவும், என்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்வேன்.இவ்வாறு சூரிய பிரகாஷ் ரெட்டி கூறினார். | ||