Indian Railways News => Topic started by railgenie on Mar 12, 2013 - 16:00:06 PM


Title - ரயில்வே திட்டங்கள் அமல்படுத்தப்படாதது பற்றி மக்களவையில் எம்.பிக்.கள் புகார்
Posted by : railgenie on Mar 12, 2013 - 16:00:06 PM

ரயில்வே திட்டங்கள் அமல்படுத்தப்படாதது குறித்து நாடாளுமன்றத்தில் பல்வேறு எம்.பி.க்கள் புகார் தெரிவித்தனர்.

மக்களவை திங்கள்கிழமை காலையில் கூடியதும், வெனிசூலா அதிபர் ஹியூகோ சாவேஸின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அவைத் தலைவர் மீரா குமார் கூறுகையில், ""மிகவும் மக்களிடையே பிரபலமான தலைவரான சாவேஸ், அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டார். நமக்கு வெனிசூலாவுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. சாவேஸின் தலைமையின் கீழ் இரு நாடுகளிடையிலான உறவு மேலும் வலுப்பட்டது'' என்று தெரிவித்தார். சாவேஸýக்கு எம்.பி.க்கள் சில நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.

ரயில்வே திட்டங்கள்: ÷இதையடுத்து, ரயில்வே பட்ஜெட் தொடர்பான விவாதம் தொடங்கியது. இதில் முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பங்கேற்றுப் பேசினார். கிழக்கு-மேற்கு ரயில் சரக்குப் போக்குவரத்து இணைப்புத் திட்டம் தாம் ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து 2009இல் விலகிய பிறகு கிடப்பில் போடப்பட்டதாக அவர் குறை கூறினார். ""ரயில்வேத் துறை வருவாய் ஈட்ட பயணிகள் கட்டணத்தை உயர்த்துவதற்குப் பதிலாக சரக்குக் கட்டணங்களை உயர்த்த வேண்டிய தேவை உள்ளது. ரயில் கட்டண ஆணையம் அமைக்கப்படுவதை எதிர்ப்போம். ஏனெனில், ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் சதி இது'' என்று லாலு பிரசாத் குறிப்பிட்டார்.

சமாஜவாதிக் கட்சி எம்.பி. ரேவதி ரமண் சிங் பேசுகையில், அரசு சரக்குக் கட்டணங்களை உயர்த்த வேண்டும். புதிய திட்டங்களை அறிவிப்பதற்குப் பதிலாக, நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களை முடிக்க அரசு ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இவ்விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பல்வேறு எம்.பி.க்களும், ""அடுத்தடுத்து வந்த ரயில்வே அமைச்சர்கள் பல திட்டங்களை அறிவிக்கின்றனர். ஆனால் அவை வருடக்கணக்கில் அமல்படுத்தப்படுவதில்லை'' என்று புகார் தெரிவித்தனர்.