Indian Railways News => Topic started by nikhilndls on Oct 31, 2012 - 16:00:08 PM


Title - விரைவில் சென்னை-மதுரை துரந்தோ ரயில்
Posted by : nikhilndls on Oct 31, 2012 - 16:00:08 PM

மதுரை : ""சென்னை-மதுரை துரந்தோ, திண்டுக்கல்-பழநி ரயில் விரைவில் இயக்கப்படும்,'' என, மதுரையில் ரயில்வே உபயோகிப்பாளர் ஆலோசனைக் குழு கூட்டத்தில், கோட்ட மேலாளர் ஏ.கே.ரஸ்தோகி தெரிவித்தார்.

இதில் நடந்த விவாதம்:

குழு உறுப்பினர் அயோத்தி, திருப்புவனம்: ராமேஸ்வரம் ரயில்வே லைன் திருப்புவனம் வழியாக செல்கிறது. பேரூராட்சிக்கு உட்பட்ட பழையூர் ரயில்வே லைனுக்கு தெற்கு
பக்கம் உள்ளது. அப்பகுதிக்கு கிராமப்புற மின்இணைப்பு மூலம் சப்ளை நடக்கிறது.
மிக குறைந்தழுத்த மின்சாரத்தில் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். அப்பகுதிக்கு பேரூராட்சியிலிருந்து ரயில்வே லைனை கடந்து மின்சப்ளை கொண்டு செல்ல வேண்டும். மதுரை-போடி லைன் விரைந்து அமைக்க வேண்டும். கூடல்நகரில் ரயில்கள் நிற்க வேண்டும்.
ஜெகதீசன், தொழில், வர்த்தக சங்கம், மதுரை: கோட்டத்தில் ரயில்வே வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற ஏதுவாக, நிதி ஒதுக்கீடு கோர வேண்டும். அகல பாதை பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். சென்னை-
நாகர்கோவில் இரட்டை பாதை திட்டத்தை முடிக்க வேண்டும்.
பிரம்மநாயகம், தூத்துக்குடி: சென்னை-குருவாயூர் ரயிலில், மதுரை வரும் வரை எட்டு பெட்டிகளை தூத்துக்குடி வரை நீடிக்க வேண்டும். தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு பகல் நேர விரைவு ரயில் இயக்க வேண்டும்.
தனவேல், புதுக்கோட்டை: ராமேஸ்வரம்-கோவை வாராந்திர ரயிலை தினமும் இயக்க வேண்டும். புதுக்கோட்டை ஸ்டேஷன் கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
கணேசன், அம்பாசமுத்திரம்: செங்கோட்டை-நெல்லை இடையே கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும். செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும்.
ராஜாராம், மானாமதுரை: மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் பேரூராட்சி குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டேஷன் ரோட்டை செப்பனிட வேண்டும்.
கோட்ட மேலாளர் ரஸ்தோகி, ""உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். திண்டுக்கல்-பழநி, சென்னை-மதுரை துரந்தோ ரயில்கள் விரைவில் இயக்கப்படும். அகல பாதை பணிகள் படிப்படியாக முடிக்கப்படும். கடந்தாண்டு பயணிகள் வசதிக்காக ரூ.11 கோடி செலவிடப்பட்டது. இந்தாண்டு இதுவரை ரூ. 7.85 கோடி செலவிடப்பட்டுள்ளது,'' என்றார். கூடுதல் மேலாளர் அஜீத்குமார் உட்பட கோட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர். தெற்கு ரயில்வே மண்டல ரயில்வே உபயோகிப்பாளர் குழு உறுப்பினருக்கான தேர்தல் நடந்தது. வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.