Indian Railways News => Topic started by ConfirmTicket on Nov 05, 2012 - 21:00:45 PM


Title - தீபாவளி பண்டிகை நெருங்குவதால் ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு|Intensive monitoring stations in
Posted by : ConfirmTicket on Nov 05, 2012 - 21:00:45 PM

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு

சென்னை: ரயில்களில் பட்டாசு கொண்டு செல்வதை தடுக்க ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு  வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக வணிக நிறுவனங்கள் அதிகமாக இருக்கும் தி.நகர் பக்கத்தில் உள்ள மாம்பலம் ரயில் நிலையத்தில், கண்காணிப்பை அதிகரிக்கும்படியும், பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு சென்னைக் கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை ஆணையர் எஸ்.ஆர்.காந்தி  உத்தரவிட்டார். அதனையடுத்து மாம்பலம் ரயில்நிலையத்தில் நேற்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை போலீசார் வினியோகித்தனர். அதில், கூட்ட நெரிசலில் உடமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். கை குழந்தைகள் மீது கவனமாக இருக்க வேண்டும். எளிதில் தீப்பிடிக்கும் பட்டாசு உள்ளிட்ட பொருட்களை ரயிலில் கொண்டுச் செல்லக் கூடாது' என்பது உட்பட பல்வேறு விழிப்புணர்வு தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும்  ஒலிபெருக்கி மூலமும் இந்த விவரங்கள் ஒலிபரப்பி வருகின்றனர். நடை பாலத்திலும் நெரிசலை தவிர்க்க தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.