Indian Railways News => Topic started by RailXpert on Oct 22, 2012 - 21:30:13 PM


Title - ஜோலார்பேட்டை அருகே மலைப்பாதையில் சென்னை ரெயில் தடம்புரண்டது: பயணிகள் உயிர் தப்பினர்
Posted by : RailXpert on Oct 22, 2012 - 21:30:13 PM

ர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து நேற்று இரவு காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்கு புறப்பட்டது. அதிகாலை 3 மணியளவில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள கொத்தூர்-மல்லானூர் மலை பாதையில் ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது மழை பெய்து கொண்டிருந்தது.

இதனால் மலைப் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. திடீர் என்று மலையிலிருந்து பெரிய பாறாங் கல் ஒன்று உருண்டு தண்டவாளத்தில் வந்து விழுந்தது. பாறை அருகில் வந்த போதுதான் ரெயில் டிரைவர் இதனை பார்த்தார்.

உடனே டிரைவர் ரெயில் வேகத்தை குறைத்தார். அப்போது பாறை ரெயில் பெட்டியில் மோதி நின்றது. இதனால் ரெயில் குலுங்கியது. அதன் காரணமாக 5 பெட்டிகள் தடம் புரண்டன. அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ரெயில் பயணிகள் பெட்டிகள் தடம் புரண்டதால் பயத்தில் கூச்சலிட்டனர்.

பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்காமல் அப்படியே சாய்ந்து நின்றது. இதனால் உயிர் சேதம் ஏற்படவில்லை.  பெட்டிகள் தடம் புரண்டதால் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயம் அடைந்தனர். ரெயில் டிரைவர் சாமர்த்தியமாக ரெயிலின் வேகத்தை குறைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதுபற்றி ரெயில் டிரைவர் ஜோலார்பேட்டை ரெயில் நிலைய அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று 5 பெட்டிகளையும் சரி செய்தனர். நாட்டறம்பள்ளி- திருப்பத்தூர் பகுதியில் இருந்து தீயணைப்பு படை வீரர்களும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த பகுதியில் மலைச்சரிவு ஏற்பட்டிருந்ததால் அங்கு மீட்பு குழு செல்வதற்கு அதிக நேரம் ஆனது.