Indian Railways News => Topic started by Jitendar on Dec 04, 2012 - 15:00:03 PM


Title - pothu news | 5 ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம் Dinamalar
Posted by : Jitendar on Dec 04, 2012 - 15:00:03 PM

சென்னை : திருச்சி ரயில்வே யார்டில், மேம்பாட்டு பணி நடப்பதால், ஐந்து ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. திருச்சியிலிருந்து சென்னை எழும்பூருக்கு, மாலை, 4:00 மணிக்கு இயக்கப்பட வேண்டிய, ஹவுரா எக்ஸ்பிரஸ், இம்மாதம், 11ம் தேதி, 95 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். குருவாயூரிலிருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும், குருவாயூர் எக்ஸ்பிரஸ், 10ம் தேதி, இரண்டு மணி நேரம் தாமதமாக இயக்கப்படும்.
சென்னை எழும்பூரிலிருந்து இயக்கப்படும், குருவாயூர் எக்ஸ்பிரஸ், 11ம் தேதி, எழும்பூரிலிருந்து இரண்டு மணி நேரம் தாமதமாக இயக்கப்படுவதால், மாலை, 5:00 மணிக்கு பிறகே திருச்சி சென்றடையும்.திருச்சியிலிருந்து, காலை, 9:35 மணிக்கு, சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் சோழன் எக்ஸ்பிரஸ் வரும், 7ம் தேதியிலிருந்து, 11ம் தேதி வரை, 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். சென்னை எழும்பூரிலிருந்து, காலை 8:15 மணிக்கு திருச்சிக்கு இயக்கப்படும் சோழன் எக்ஸ்பிரஸ், 11ம் தேதி, ஒரு மணிநேரம் தாமதமாக இயக்கப்படும்.