Indian Railways News => Topic started by RailXpert on Oct 30, 2012 - 07:30:54 AM


Title - district news | ரயில்வே ஸ்டேஷனில் காட்சி பொருளாக
Posted by : RailXpert on Oct 30, 2012 - 07:30:54 AM

திருப்பூர்:ரயில்களில் இருக்கை விவரங்கள், டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களின் தற்போதைய நிலை பற்றிய விவரங்கள் அறிவிக்கப்படும், "எல்சிடி டிவி'க்கள், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் செயல்படாமல் உள்ளன. செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால், ரயில் பயணிகள் மிகவும் பயனடைவர்.திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் வழியாக தினமும் 110 ரயில்கள் செல்கின்றன; இதில் 90 ரயில்கள் ஸ்டேஷனில் நின்று செல்கின்றன. வெளியூர் செல்ல தினமும் 1000க்கும் மேற்பட்டவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். இதில், 75 சதவீதம் பேருக்கு மட்டுமே இருக்கை உறுதியாகிறது. மீதமுள்ள 25 சதவீதம் பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள், தாங்கள் பயணம் செய்யும் நாட்களுக்கு முதல் நாள் வந்து, டிக்கெட் முன்பதிவு அலுவலகத்திலோ,

ரயில்வே தகவல் மையத்திலோ கேட்டு தெரிந்து கொள்கின்றனர். இதனால், மற்ற பணிகள் பாதிக்கப்பட்டன. இதை கருத்தில்கொண்டு, ரயில்வே நிர்வாகம், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், ஆறு இடங்களில் "எல்சிடி டிவி'கள் அமைத்தது.அதில், ரயில்களில் இருக்கை விவரம், டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்போர் பெயர் பட்டியலில் உள்ளவர்களின், தற்போதைய நிலை பற்றிய விவரங்கள் அறிவிக்கப்பட்டது. இது, ரயில் பயணிகளுக்கு மிகவும் பயனுடையதாக இருந்தது. அதை பார்த்து விவரங்களை தெரிந்துகொண்டு, அதன்பின், பலர் டிக்கெட் முன்பதிவு செய்து வந்தனர். கடந்த நான்கு மாதங்களாக, "எல்சிடி டிவி'கள்

இயங்காமல் காட்சிப் பொருளாக உள்ளன. இதனால், மீண்டும் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அவற்றை மீண்டும் இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்