Indian Railways News => Topic started by messanger on Jan 21, 2013 - 15:00:25 PM


Title - பாம்பன் பாலத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது
Posted by : messanger on Jan 21, 2013 - 15:00:25 PM

பாம்பன் ரயில் பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. ஆனால், இரவு நேரத்தில் செல்லும் ரயில்கள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பாம்பன் ரயில் பாலத்தில் ஜனவரி 9-ஆம் தேதி சரக்கு கப்பல் மோதியதில் பாலத்தின்  தூண் சேதமடைந்தது. அந்த தூணை ரயில்வே நிர்வாகம் செப்பனிட்டதைத் தொடர்ந்து சனிக்கிழமை சோதனை ஓட்டமாக முதலில் அதிக எடையில்லாத ரயில் என்ஜின் ஒன்றையும், பின்னர் ஆள்கள் இல்லாத ராமேசுவரத்திலிருந்து புவனேசுவரம் செல்லும் ரயிலையும் இயக்கிப் பார்க்கப்பட்டது.

சோதனை ஒட்டம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை முதல் பாம்பன் பாலத்தில் அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டன. ராமேசுவரத்திலிருந்து இரவு, அதிகாலை நேரங்களில் செல்லும் ரயில்கள் மட்டும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். பகல் நேரத்தில் ராமேசுவரத்திலிருந்து திருச்சி, மதுரை செல்லும் பயணிகள் ரயில், சென்னை விரைவு ரயில் ஆகியன ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல இயங்கின.

ராமேசுவரத்திலிருந்து சென்னை செல்லும் சேது எக்ஸ்பிரஸ் மட்டும் மண்டபத்திலிருந்து இயக்கப்பட்டது.