Indian Railways News => Topic started by greatindian on Dec 15, 2012 - 03:00:04 AM


Title - ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
Posted by : greatindian on Dec 15, 2012 - 03:00:04 AM

ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
கரூர், டிச. 13:
கரூர்&திருச்சி பாசஞ்சர் ரயில் மற்ற நாட்களில் இயக்கப்படுவது போல் ஞாயிற்றுக்கிழமையும் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூரில் இருந்து தினமும் திருச்சிக்கு பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் கரூரில் இருந்து திருச்சிக்கு கல்லு�ரி, பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு வேலைக்காக செல்பவர்கள் பயணம் செய்கின்றனர். கரூரை அடுத்துள்ள வீராக்கியம், சித்தலவாய், மகாதானபுரம், லாலாப்பேட்டை. குளித்தலை போன்ற ஊர்களில் இருந்தும் திருச்சிக்கு ஏராளமான பயணிகள் சென்று வருகின்றனர். புஷ் அன்ட் புல் முறையில் இயக்கப்படும் இந்த ரயில் ஒவ்வொரு நாளும் இரவு கரூர் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு மறுநாள் காலை திருச்சி புறப்படும். வாரம் ஒருமுறை சர்வீஸ் செய்வதற்காக இந்த ரயில் பொன்மலை பணிமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த நாளில் குறைந்த பெட்டிகளுடன் ரயில் இணைக்கப்படும். தினமும் காலை 6.50 மணிக்கு கரூரில் புறப்படும் இந்த ரயில் 8.50மணிக்கு திருச்சி சென்று அங்கிருந்து மீண் டும் 9.15மணிக்கு புறப்பட்டு 11.35மணிக்கு கரூர் வந்து சேரும்.
மீண்டும் பிற்பகல் 3.30மணிக்கு கரூரில் இருந்து புறப்பட்டு 5.30மணிக்கு திருச்சிசென்று அங்கிருந்து 6மணிக்கு புறப்பட்டு 8.15மணிக்கு கரூர் வந்து சேருகிறது. இந்த பாசஞ்சர் ரயில் ஞாயிற்றுகிழமை இயக்கப்படுவதில்லை. காலையில் கரூரில் இருந்து 6.40க்கு புறப்பட்டு 8.50க்கு திருச்சி சென்று சேரும். அதன்பிறகு மீண்டும் மாலை 6 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு கரூர் வந்து சேருகிறது. இடைப்பட்ட நேரத்தில் இயக்கப்படுவதில்லை. ஞாயிற்றுக்கிழமை பயணி கள் அதிக அளவில் திருச்சி & கரூர் மார்க்கத்தில் சென்று வருகின்றனர். முகூர்த்தம் மற்றும் பண்டிகை காலங்களில் அதிக கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.
பிற்பகல் நேரத்தில் பாசஞ்சர் ரயில் இயக்கப்படுவதில்லை என்பதால் பிற ரயில்களில் கூட்டம் அதிக மாக காணப்படுகிறது. மேலும் பஸ் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டிருப்பதால் ஞாயிறன்றும் வழக்கம்போல் கரூர்&திருச்சி பாசஞ்சர் ரயிலை இயக்கவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து ரயில் பயணிகள் சங்க தலைவர் அண்ணாதுரை கூறுகை யில், ஞாயிற்றுக்கிழமைகளில் திருச்சி பாசஞ்சர் ரயில் ஒரு நடை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். ரயில்வே நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியதோடு, போராட்டம் நடத்தியும் கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கரூர் தொகுதி எம்பியும், ஆலோசனைக்குழு உறுப்பினர்களும் இதுசம்பந்தமாக ரயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தி பயணிகள் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும். இல்லாவிட் டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்றார்.
கரூர்&திருச்சி பாசஞ்சர் ரயிலை
இல்லாவிட்டால் போராட்டம் ரயில்பயணிகள் எச்சரிக்கை