| ஜங்ஷனில் ரூ1 கோடியில் போடப்பட்ட புதிய சாலை பயன்பாட்டுக்கு வருமா ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு - Distri by nikhilndls on 09 December, 2012 - 09:00 AM | ||
|---|---|---|
nikhilndls | ஜங்ஷனில் ரூ1 கோடியில் போடப்பட்ட புதிய சாலை பயன்பாட்டுக்கு வருமா ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு - Distri on 09 December, 2012 - 09:00 AM | |
திருச்சி, : திருச்சி ரயில்வே ஜங்ஷனில் ரூ.1 கோடி செலவில் அமைக்கப்பட்ட 2வது நுழைவுவாயில் சாலை பயன் பாட்டுக்கு வரவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி ரயில்வே ஜங்ஷனுக்கு தினமும் 30,000 பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு ஒரு நுழைவுவாயில் மட்டுமே பயன் பாட்டில் உள்ளது. இத னால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 2010ல் ரூ.1 கோடி செலவில் ரயில் கல்யாண மண்டபத்துக்கு அருகே 2வது நுழைவு வாயிலுக் கான சாலை அமைக்கும் பணி துவங்கியது. பாரதிதாசன் சாலை யில் இருந்து வரும் பஸ்கள், கார்கள் மற்றும் வாகனங் கள் புதிய நுழைவாயில் சாலையில் நுழைந்து பழைய சாலையிலுள்ள முன்பதிவு மையத்துக்கு பின்புறம் வழியாக பிளாட்பாரத்துக்கு செல்லும் வகையில் 2வது நுழைவுவாயில் சாலை அமைக்கப்பட் டது. சாலை அமைக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதுதொடர்பாக ரயில்வே வட்டாரங்கள் தரப்பில் கூறியதாவது: 2வது நுழைவு வாயில் சாலை 70 அடி அகலம், 250மீ நீளத்தில் ரூ.1 கோடி யில் அமைக்கப்பட் டது. புதிய சாலை, பாரதிதாசன் சாலையைவிட 2 அடி உய ரமாக இருந்ததால், நுழைவுவாயில் சாலை தொடங்கும் இடத் தில் இருந்த 6 அக லமான கழிவுநீர் வாய்க் காலுக்கும் பாதிப்பு இலலா மல், புதிய சாலை அமைக்கப்பட்டு பாரதிதாசன் சாலையுடன் இணைத்து அனைத்து பணிகளும் முடிந்தன. புதிய சாலை பகுதியில் இருந்து தபால் நிலையமும் அகற்றப்பட்டது. ஆனால், புதிய சாலையை ஜங்ஷனு டன் இணைக்க வேண்டிய பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதற்கிடையே புதிய நுழைவு வாயில் சாலையில் ஒரு பகுதி டூவீலர் கட்டண பார்க்கிங் பகுதியாகவே மாறியுள்ளது. இந்த சாலை திறக்கப்பட் டால் முதலாவது நுழைவுவாயில் சாலையில் போக்குவரத்து நெரிசல் பெரு மளவு குறையும். அதிகாரிகள்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். சமூக விரோதிகளால் அச்சம் | ||