Indian Railways News => Topic started by Mafia on Dec 21, 2012 - 00:00:52 AM


Title - சென்னையில் இருந்து மதுரை வந்த அனைத்து ரெயில்களும் ஒரு மணி நேரம் தாமதம்: பயணிகள் அவதி || Chennai to m
Posted by : Mafia on Dec 21, 2012 - 00:00:52 AM

மதுரை, டிச. 19-

சென்னையில் இருந்து நேற்று மாலை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்தது. இதில் தென் மாவட்ட பயணிகள் ஏராளமானோர் பயணம் செய்தனர். இரவில் விழுப்புரம் அருகே வந்து கொண்டிருந்தபோது வழியில் சிக்னல் கிடைக்காததால் முத்துநகர் ரெயில் நிறுத்தப்பட்டது. சிக்னல் குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததும் பழுது சீர் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

இதனால் மதுரைக்கு வழக்கமாக அதிகாலை 4.30 மணிக்கு வரவேண்டிய முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக 5.30 மணிக்கு வந்தடைந்தது. இதேபோல் இதற்கு பின்னால் வந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் 4.30 மணிக்கு வர வேண்டியது, 5.30 மணிக்கும், பொதிகை 6.30 மணிக்கும், நெல்லை 7 மணிக்கும், பாண்டியன் 6.20 வரவேண்டியது 7.30 மணிக்கும் மதுரைக்கு வந்தடைந்தது.

சுமார் ஒரு மணி நேரம் ரெயில்கள் தாமதமாக வந்ததால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.