Indian Railways News => Topic started by chotelal on Nov 21, 2012 - 00:00:37 AM


Title - கரூர் சேலம் அகல ரெயில் பாதையில் பொங்கலுக்குள் பயணிகள் ரெயில் இயக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது
Posted by : chotelal on Nov 21, 2012 - 00:00:37 AM

கரூர்,

கரூர்சேலம் அகல ரெயில் பாதையில் வருகிற பொங்கலுக்குள் பயணிகள் ரெயில் இயக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தம்பிதுரை எம்.பி. கூறினார்.

அகல ரெயில் பாதை

கரூர்சேலம் அகல ரெயில் பாதை பணி முடிவடைந்து உள்ளது. அதன்படி தற்போது கரூர்சேலம் அகல ரெயில் பாதையில் சரக்கு ரெயில் சென்று வருகிறது.

இந்த நிலையில் கரூரை அடுத்த வாங்கல் பகுதியில் கரூர்சேலம் அகல ரெயில் பாதையை தம்பிதுரை எம்.பி. நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கரூர்சேலம் வழியாக அகல ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்று மக்கள் விருப்பம் தெரிவித்தனர். அதன்படி கடந்த 199899ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா, அப்போதைய பிரதமர் வாஜ்பாயை அணுகி, இந்த திட்டத்தை விரைவில் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார். அதன்படி கரூர்சேலம் அகல ரெயில் பாதைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பல கால கட்டங்களில் இந்த பணிக்கு அதிக அளவு நிதி ஒதுக்க வில்லை. இதனால் கால தாமதம் ஆகியது.

சரக்கு ரெயில்

இந்த நிலையில் கடந்த ஆண்டு ரூ.120 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.250 கோடி நிதி ஒதுக்கப் பட்டது. 2012ம் ஆண்டுக்குள் இந்த பாதையில் ரெயில் இயக்க வேண்டும் என்று முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதன்படி தற்போது சரக்கு ரெயில் சென்று கொண்டு உள்ளது.

முதல்அமைச்சர் ஜெய லலிதாவின் வேண்டுகோள் படி வருகிற பொங்கலுக்குள் கரூர்சேலம் அகல ரெயில் பாதையில் பயணிகள் ரெயில் இயக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இந்த ரெயில் பாதையில், ரெயில் இயக்கப்படும் போது கரூர் பகுதி பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சி அடையும். மேலும் முதல் அமைச்சர் ஜெயலலிதா மக் களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த ஆய்வில் காமராஜ் எம்.எல்.ஏ., கரூர் நகராட்சி தலைவர் எம். செல்வராஜ், துணை தலைவர்ஏ.ஆர். காளியப்பன், காகிதபுரம் பேரூராட்சி தலைவர் என்ஜினீயர் கே.கமலக் கண்ணன், மாவட்ட ஊராட்சி தலைவர் கீதா மணிவண்ணன், தென்னக ரெயில்வே ஆலோ சனை குழு உறுப்பினர் பி.கே.எஸ். முரளி, சேலம் ரெயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் தவமணி பாண்டி யன், வணிக மேலாளர் மகேஷ், கரூர் ரெயில் நிலைய மேலாளர் சுந்தர்ராஜ், சேலம் கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வெங்கடேசன், கரூர் மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவர் வக்கீல் கே.ராஜூ , வாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் பி.எல்.முருகேசன், முன்னாள் தலைவர் வாங்கல் பாலமுருகன், கிராம நிர்வாக அதிகாரி கே. காமராஜ், வாங்கலம்மன் சேவா சங்க பொருளாளர் வி.கே.ஏ. சாமி யப்பன், செயலாளர் ஜே.டெக்ஸ் தங்கராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு சாதிக், கரூர் மாவட்ட மீனவர் அணி செயலாளர் சுதாகர், கரூர் நகர இளைஞர் அணி செயலாளர் ஆர்.எஸ்.ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.