Indian Railways News => Topic started by puneetmafia on Dec 11, 2012 - 03:00:28 AM


Title - ஈரோடு: ரெயில் நிலையத்தில் டேங்கில் தண்ணீர் இல்லாததால் ரெயில் முன்பு நின்று ஆந்திர அய்யப்ப பக்தர்கள்
Posted by : puneetmafia on Dec 11, 2012 - 03:00:28 AM

கார்த்திகை மாதத்தையொட்டி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து சபரிமலை அய்யப்ப சுவாமி கோவிலுக்கு சென்று வருகிறார்கள். ஈரோடு வழியாக கேரள மாநிலம் செல்லும் ரெயில்களில் ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் சென்ற வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து கேரள மாநிலம் செல்லும் ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கம்போல் இன்று காலை 10.20 மணி அளவில் ஈரோடு வந்தது.

அந்த ரெயில் பெட்டியில் உள்ள டேங்கில் தண்ணீர் தீர்ந்து விட்டதால் குளிக்க முடியாமல் தவித்த ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் ரெயில் நிலையத்தில் இறங்கி ரெயில் பெட்டிகளில் உள்ள டேங்குகளில் தண்ணீர் நிரப்பும்படி ரெயில் முன்பு நின்று திடீர் போராட்டம் நடத்தினார்கள். இதனை கண்ட ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ரெயில்வே போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி டேங்குகளில் தண்ணீர் நிரம்பினர்.

இந்த ரெயில் ஆந்திர மாநிலம் காக்கி நாடா, விசாக பட்டினம், விஜயவாடா பகுதியை சேர்ந்த ஏராளமான அய்யப்ப பக்தர்கள் வந்திருந்தனர். அய்யப்ப பக்தர்களின் போராட்டத்தால் ஈரோட்டில் சுமார் ஒரு மணி நேரம் வரை ரெயில் நின்றது. இதனால் ரெயிலில் வந்த மற்ற பயணிகள் பொறுமை இழந்தனர். அவர்கள் அய்யப்ப பக்தர்களின் போராட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இதை தொடர்ந்து ரெயில் புறப்பட்டு செல்ல முயன்றும் 3 முறை அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தி விட்டனர். தண்ணீர் டேங்க் நிரப்பப்பட்டதும் கீழே நின்ற அய்யப்ப பக்தர்கள் ரெயில் ஏறி கொண்டனர். இதை தொடர்ந்து ரெயில் புறப்பட்டுச் சென்றது.