Indian Railways News => Topic started by ConfirmTicket on Dec 17, 2012 - 03:00:54 AM


Title - Train fare hike is necessary, financial position of Railways not sound: Minister | ரயில் கட்டண உயர்வ
Posted by : ConfirmTicket on Dec 17, 2012 - 03:00:54 AM

ஐதராபாத்: ரயில் கட்டணத்தை உயர்த்துவது அவசியமாகிறது என மத்திய இணை அமைச்சர் கூறினார். ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் புதிய எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தினை கொடியசைத்து துவக்கி வைத்து மத்திய ரயில்வே இணை அமைச்சர் சூர்ய பிரகாஷ் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: ரயில்வேயின் நிதி நிலைமை தற்போது மிகவும் மோசமாக உள்ளது. எனவே ரயி்ல் கட்டணங்களை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை. ரயில் கட்டண உயர்வு அவசியமானது என்றார். ஆந்திரா மாநிலத்தில் ரூ.25 ஆயிரம் கோடி ரயி்லவே திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் முடங்கியுள்ளது.காரணம் நிதி நிலைமை தான். எனவே அடுத்த ரயில்வே பட்ஜெட்டில் ரயில் கட்டண உயர்வு நிச்சயம் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.