Indian Railways News => Topic started by greatindian on Dec 07, 2012 - 06:00:37 AM


Title - PM sets deadline for setting up Rail Tariff Authority | ரயில் கட்டணம் உயர்த்த பிரதமர் அவசரம் Dinamal
Posted by : greatindian on Dec 07, 2012 - 06:00:37 AM

புதுடில்லி : கடந்த 9 ஆண்டுகளாக பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்படாமல் இருப்பதால் அதனை உயர்த்துவது தொடர்பாக அமைச்சர்கள் குழு டிசம்பர் 31ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு பிரதமர் மன்மோகன் சிங் அறிவுறுத்தியுள்ளார்.

பயணிகள் போக்குவரத்து அமைச்சகங்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் ரயில் கட்டண அதிகார சபை ரயில் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக இறுதி முடிவை டிசம்பர் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
ரூ.24,000 கோடி நஷ்டம் :
2012-2013ம் ஆண்டு ரயில் பட்ஜெட்டில் இது தொடர்பான அமைச்சரவை ஒப்புதல் பெற்றது. தற்போது ரயில்வே துறை பயணிகள் கட்டண பிரிவில் ரூ.24,000 கோடி நஷ்டத்தை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த காலத்தில் திரிணாமுல் காங்., கட்சியினர் வசம் ரயில்வே துறை இருந்ததால் கட்டண உயர்வை அமல்படுத்த முடியாமல் காங்., அரசு தவித்தது,. தற்போது காங்., வசம் இருப்பதால் விரைவில் கட்டண உயர்வு கொண்டு வரமுடியும். குறிப்பாக கட்டணத்தை உயர்த்தினால் பயணிகளுக்கு கூடுதல் வசதியை தரமுடியும் என மத்திய அரசு தரப்பில் நியாயப்படுத்தப்படுகிறது.