| Indian Railways News => | Topic started by nikhilndls on Dec 09, 2012 - 09:01:10 AM |
Title - district news | ரயில்களில் தொடர்ந்து மிரட்டி வழிப்பறி DinamalarPosted by : nikhilndls on Dec 09, 2012 - 09:01:10 AM |
|
|
சேலம்: சேலத்தில், நேற்று வடமாநில ரயில்களில், பயணிகளிடம் வழிபறியில் ஈடுபட்ட திருநங்கைகள் உள்பட, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.சேலம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில், ரயில் பயணிகளிடம் தொடர்ந்து வழிபறி, மொபைல்ஃபோன், லேப்-டாப் உள்ளிட்ட உடமைகளை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வந்தது. பயணிகள் மத்தியில் கடும் பீதி ஏற்பட்டது.குறிப்பாக, வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில், திருநங்கைகளுடன், வழிப்பறி கொள்ளையர்கள், பயணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தனர். சில நாட்களுக்கு முன், சாம்பல்பட்டியில், திருநங்கைகள் பயணிகளிடம் மிரட்டி பணம் பறித்த சம்பவத்தால் சர்ச்சை ஏற்பட்டது.கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல், சபரிமலை சீசன் உள்ளிட்ட காரணங்களால், தற்போது சேலம் வழியாக அதிகளவில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது.ரயில்களில் கொள்ளையர்களின் அட்டகாசத்தை ஒடுக்க, ரயில்வே போலீஸார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட வழித்தடங்களில் செல்லும் ரயில்களில், சாதாரண உடையில், போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.நேற்று முன்தினம் அதிகாலை, திருவனந்தபுரம்-சாலிமர் செல்லும் குருதேவ் எக்ஸ்பிரஸில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ரயிலில், குடியாத்தம் பகுதியை சேர்ந்த, திருநங்கைகள் மாலதி, 25, கலை, 24, சுமதி, 29, கங்கா, 23, ஆகியோர் ரயிலில் வந்துள்ளனர்.சேலம் அருகே ரயில் வந்து கொண்டருந்தபோது, நான்கு பேரும், பயணிகளிடம் வலுக்கட்டாயமாக பணம் கேட்டுள்ளனர். ஒரு சிலர் பணம் கொடுத்துள்ளனர். பணம் கொடுக்காதவர்களிடம், மிளகாய் பொடியை கண்ணில் தூவி விடுவதாக கூறி மிரட்டியுள்ளனர்.வேறு வழியில்லாமல், பயணிகள் சிலர் அவர்களிடம் பணத்தை கொடுத்துள்ளனர். சேலம் ஜங்சன் ரயில் நிலையத்துக்குள் ரயில் நுழைந்ததும், பயணிகள், சிலர் திருநங்கைகளை பார்த்து சத்தம் போட்டுள்ளனர். ரயில்வே போலீஸார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார், மாலதி, கலை, சுமதி, கங்கா ஆகிய நான்கு பேரையு பிடித்தனர்.அவர்களிடம் இருந்து,1,000 ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு மொபைல்ஃபோன் பறிமுதல் செய்யப்பட்டது. ரயில்வே போலீஸார் அவர்களை கைது செய்து, அவர்களுடன் தொடர்புடையவர்கள், எந்தெந்த ரயில்களில், இதுப்போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வேறு எங்காவது தங்கள் கைவரிசையை காட்டியுள்ளார்களா, என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.திருநங்கைகள் மட்டும் அல்லாமல், டிக்கெட் எடுக்காமல், சேலம் ஜங்சன் ரயில் நிலையத்துக்கு வரும் உள்ளூர் ரவுடிகள் பலர் தொடர்ந்து செயின் பறிப்பு உள்ளிட்ட அட்டகாசங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கண்காணித்து போலீஸார் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். |