Indian Railways News => Topic started by irmafia on Dec 07, 2012 - 06:00:29 AM


Title - district news | ரயில் மறியல் செய்ய முயன்ற 300 வியாபாரிகள் கைது Dinamalar
Posted by : irmafia on Dec 07, 2012 - 06:00:29 AM

சென்னை:சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று ரயில் மறியலில் ஈடுபட முயன்ற, வணிகர் சங்கத்தினர் 300 பேரை, போலீசார் கைது செய்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன், அன்னிய முதலீட்டை எதிர்த்து, வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா தலைமையில், நேற்று ஏராளமான வணிகர்கள், கறுப்பு சட்டை அணிந்தும், கழுத்தில் தூக்கு கயிறு கட்டியும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் விக்கிரம ராஜா பேசியதாவது:
அன்னிய முதலீட்டை ஆதரிப்பது குறித்து, மக்க ளிடம் பொது ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்.
அன்னிய முதலீட்டுக்கு ஆதரவாக, பார்லிமென்ட்டில் ஓட்டளிக்கும் எம்.பி.க்கள் வீடுகளை முற்றுகையிடுவோம்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், வரும் 16, 17ம் தேதிகளில், அகில இந்திய வணிகர் சம்மேளன கூட்டம் நடக்கிறது. அதன்பின், நாடு முழுவதும், தொடர் கடை அடைப்பு போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு, விக்கிரமராஜா கூறினார்.