| Indian Railways News => | Topic started by railgenie on Nov 20, 2012 - 15:00:24 PM |
Title - district news | திண்டுக்கல்-பழநி இடையே இன்று முதல் ரயில் இயக்கம் DinamalarPosted by : railgenie on Nov 20, 2012 - 15:00:24 PM |
|
|
திண்டுக்கல்: கடந்த மூன்றரை ஆண்டுகளாக நடந்து வந்த திண்டுக்கல்- பழநி இடையேயான அகலரயில்பாதை பணி, முடிவடைந்து இன்று முதல் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. பகல் 12.30 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், சித்தன் எம்.பி., மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அஜய் காந்த் ரஸ்தோகி உட்பட ரயில்வே அதிகாரிகள் பங்கேற்கின்றனர். திண்டுக்கல்லில் இருந்து புறப்படும் ரயில் அக்கரைப்பட்டி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி ஸ்டேஷன்களில் நின்று செல்லும். ரயிலில் 10 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.ரயில்கள் வந்து செல்லும் நேரம் விபரம்:திண்டுக்கல்லில்புறப்படும் நேரம்பழநிசேரும் நேரம்காலை 5.15 -காலை 7.00பகல் 1.00 பகல் 2.30மாலை 5.30 இரவு 7.00பழநியில்புறப்படும் நேரம்திண்டுக்கல்சேரும்நேரம் காலை 8 - காலை 9.30 மாலை 3.15-மாலை 4.30இரவு 7.45 -இரவு 9.30 |