| Christmas, New Year, Pongal festival: * Special trains to Nagercoil, including the five cities | கிற by nikhilndls on 24 November, 2012 - 12:00 PM | ||
|---|---|---|
nikhilndls | Christmas, New Year, Pongal festival: * Special trains to Nagercoil, including the five cities | கிற on 24 November, 2012 - 12:00 PM | |
சென்னை:கிறிஸ்துமஸ், புத்தாண்டு, இருமுடி விழா, தைப்பூசம் மற்றும் பொங்கல் பண்டியையொட்டி சென்னையிலிருந்து நாகர்கோயில், திருநெல்வேலி உட்பட, ஐந்து முக்கிய நகரங்களுக்கு, வரும் ஜனவரி வரை, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.ரயில்கள் விபரம் வருமாறு:*நாகர்கோயில் - சென்னை எழும்பூர் இடையே, இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில், நாகர்கோயிலிலிருந்து, வரும், 25ம் தேதியிலிருந்து, ஜன., 20ம் தேதி வரை, ஞாயிற்றுக் கிழமைகளிலும், எழும்பூரிலிருந்து, வரும், 26ம் தேதியிலிருந்து, ஜன., 21ம் தேதி வரை, திங்கள் கிழமைகளிலும் இயக்கப்படும். *திருநெல்வேலி - சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில், திருநெல்வேலியிருந்து, வரும், 29ம் தேதியிலிருந்து, ஜன., 17ம் தேதி வரை, வியாழக்கிழமைகளிலும், சென்ட்ரலிலிருந்து, வரும், 30ம் தேதியிலிருந்து, ஜன., 18ம் தேதி வரை, வெள்ளிக்கிழமைகளிலும் இயக்கப்படும்.*திருச்சி - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும், வாராந்திர ரயில், திருச்சியிலிருந்து, வரும், 26ம் தேதியிலிருந்து, ஜன., 21ம் தேதி வரை, திங்கள் கிழமைகளிலும், எழும்பூரிலிருந்து, வரும், 29ம் தேதியிலிருந்து, ஜன., 24ம் தேதி வரை, வியாழக்கிழமைகளிலும் இயக்கப்படும். | ||