Indian Railways News => Topic started by nikhilndls on Nov 24, 2012 - 12:00:45 PM


Title - Christmas, New Year, Pongal festival: * Special trains to Nagercoil, including the five cities | கிற
Posted by : nikhilndls on Nov 24, 2012 - 12:00:45 PM

சென்னை:கிறிஸ்துமஸ், புத்தாண்டு, இருமுடி விழா, தைப்பூசம் மற்றும் பொங்கல் பண்டியையொட்டி சென்னையிலிருந்து நாகர்கோயில், திருநெல்வேலி உட்பட, ஐந்து முக்கிய நகரங்களுக்கு, வரும் ஜனவரி வரை, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.ரயில்கள் விபரம் வருமாறு:*நாகர்கோயில் - சென்னை எழும்பூர் இடையே, இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில், நாகர்கோயிலிலிருந்து, வரும், 25ம் தேதியிலிருந்து, ஜன., 20ம் தேதி வரை, ஞாயிற்றுக் கிழமைகளிலும், எழும்பூரிலிருந்து, வரும், 26ம் தேதியிலிருந்து, ஜன., 21ம் தேதி வரை, திங்கள் கிழமைகளிலும் இயக்கப்படும். *திருநெல்வேலி - சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில், திருநெல்வேலியிருந்து, வரும், 29ம் தேதியிலிருந்து, ஜன., 17ம் தேதி வரை, வியாழக்கிழமைகளிலும், சென்ட்ரலிலிருந்து, வரும், 30ம் தேதியிலிருந்து, ஜன., 18ம் தேதி வரை, வெள்ளிக்கிழமைகளிலும் இயக்கப்படும்.*திருச்சி - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும், வாராந்திர ரயில், திருச்சியிலிருந்து, வரும், 26ம் தேதியிலிருந்து, ஜன., 21ம் தேதி வரை, திங்கள் கிழமைகளிலும், எழும்பூரிலிருந்து, வரும், 29ம் தேதியிலிருந்து, ஜன., 24ம் தேதி வரை, வியாழக்கிழமைகளிலும் இயக்கப்படும்.

*சென்னை எழும்பூர் - தூத்துக்குடி இடையே இயக்கப்படும், வாராந்திர சிறப்பு ரயில், எழும்பூரிலிருந்து, வரும், 27ம் தேதியிலிருந்து, ஜன., 22ம் தேதி வரை, செவ்வாய் கிழமைகளிலும், தூத்துக்குடியிலிருந்து, சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில், வரும், 28ம் தேதியிலிருந்து, ஜன., 23ம் தேதி வரை, புதன் கிழமைகளிலும் இயக்கப்படும்.*சென்னை எழும்பூர் - கோவை இடையே இயக்கப்படும், வாராந்திர சிறப்பு ரயில், எழும்பூரிலிருந்து, வரும் டிச., 3ம் தேதியிலிருந்து ஜன., 21ம் தேதி வரை திங்கள் கிழமைகளிலும், கோவையிலிருந்து, வரும் டிச., 4ம் தேதியிலிருந்து, ஜன., 22ம் தேதி வரை,செவ்வாய் கிழமைகளிலும் இயக்கப்படும்.

*சென்னை எழும்பூர் - கோவை இடையே இயக்கப்படும், வாராந்திர எக்ஸ்பிரஸ், எழும்பூரிலிருந்து, வரும் டிச., 5ம் தேதியிலிருந்து, ஜன., 23ம் தேதி வரை, புதன் கிழமைகளிலும், கோவையிலிருந்து, வரும், டிச., 6ம் தேதியிலிருந்து, ஜன., 24ம் தேதி வரை,வியாழக் கிழமைகளிலும் இயக்கப்படும்.*சென்னை எழும்பூர் - கோவை இடையே இயக்கப்படும், வாராந்திர சிறப்பு ரயில், டிச., 7ம் தேதியிலிருந்து, வரும், ஜன., 25ம் தேதி வரை, வெள்ளிக் கிழமைகளிலும், கோவையிலிருந்து, வரும், டிச., 9ம் தேதியிலிருந்து, ஜன., 27ம் தேதி வரை, ஞாயிற்று கிழமைகளிலும் இயக்கப்படும்.இச்சிறப்பு ரயில்களில் பயணம் செய்வதற்கு, இன்று முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்