Indian Railways News => Topic started by RailXpert on Nov 01, 2012 - 15:00:22 PM


Title - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் எலி, கரப்பான் பூச்சி தொல்லை : பயணிகள் அவதி
Posted by : RailXpert on Nov 01, 2012 - 15:00:22 PM

கன்னியாகுமரியிலிருந்து, நேற்று காலை சென்னை வந்த, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் வைத்திருந்த உணவு பொட்டலங்களை எலி கடித்து குதறியது.
கரப்பான் பூச்சி தொல்லையாலும் பயணிகள் அவதிக்குள்ளாகினர். ரயில் டிக்கெட் பரிசோதகரிடம் புகாரும் தெரிவிக்கப்
பட்டுள்ளது.முறையாக பராமரிக்கப்படாததால், ரயில் பெட்டிகளில் எலி, மூட்டைபூச்சி,கரப்பான் பூச்சி தொல்லை தொடர்வதாக, பயணிகள் மூலம் ரயில்வே நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இக்குறைகளை நீக்க, ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்தும்,ரயில் பெட்டிகளில், இத்தொல்லை குறைந்தபாடில்லை.கன்னியாகுமரியிலிருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை எழும்பூருக்கு இயக்கப்பட்ட கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில், திருநெல்வேலியை கடந்து வந்தபோது, எஸ்.8 பெட்டியில், மேல்பக்க படுக்கையிலிருந்து, எலி குதித்து ஓடியது. பயணிகள் கொண்டு வந்த உணவுப் பொட்டலங்களை கடித்து குதறியது. பொட்டலத்தை பிரித்து பார்த்தபோது, உள்ளே கரப்பான் பூச்சிகள் புகுந்திருந்ததும் பயணிகளுக்கு தெரியவர ஆத்திரமடைந்தனர்.உணவுப் பொட்டலங்களை வெளியே வீசிவிட்டு, பசியுடன் பயணம் செய்தனர். பெட்டியில் படுக்கைகளுக்கு கீழ் பகுதியில் கரப்பான் பூச்சிகள் நிறைய இருந்துள்ளது. அதிருப்தியடைந்த பயணிகள், ரயில் டிக்கெட் பரிசோதகரிடம் புகார் செய்துள்ளனர். புகாரை எழுத்து மூலமாக தெரிவிக்க, புகார் புத்தகம் கேட்டதற்கு, "இதோ, எடுத்து வருகிறேன்' என, கூறிச் சென்ற டிக்கெட் பரிசோதகர் மீண்டும், அந்தப் பெட்டிப் பக்கம் வரவேயில்லை. டிக்கெட் பரிசோதகர், பெயர் "பேட்ஜ்' அணியவில்லை.இது குறித்து, பயணி ராமன் கூறியதாவது:ரயில் பெட்டிகளில், எலி, கரப்பான் பூச்சி, மூட்டை பூச்சி ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே நிர்வாகம் தெரிவித்த போதும், இவைகளால், பயணிகளுக்கு தொல்லை குறைந்தபாடில்லை. இரண்டாம் வகுப்பு பெட்டிதானே என, அலட்சியமாக இருக்கிறார்களோ தெரியவில்லை.எலி, பூச்சிகளை ஒழிக்க, சென்னை பேசின்பிரிட்ஜ் யார்டில், நவீன எந்திர வசதி செய்யப்பட்டுள்ளது என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், ரயில் பெட்டியில் எலி, கரப்பான் பூச்சி, மூட்டை பூச்சி தொல்லை குறைந்தபாடில்லை.மழை காலம் என்பதால், இத்தொல்லை அதிகமாக வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்தால், பயணிகள் சிரமமின்றி பயணம் செய்யலாம்.இவ்வாறு அவர் கூறினார்.