Indian Railways News => Topic started by TrustMe on Nov 18, 2012 - 16:00:05 PM


Title - ரயில்வேயின் வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதி ரூ.2.50 லட்சம் கோடி மத்திய அமைச்சர் தகவல் | Daily T
Posted by : TrustMe on Nov 18, 2012 - 16:00:05 PM

நடப்பு நிதியாண்டில் இது வரையிலும் அறிவிக்கப்பட்டுள்ள ரயில்வேயின் வளர்ச்சி மற்றும் விரிவாக்க திட்டங்களை செயல்படுத்த ரூ.2.50 லட்சம் கோடி நிதி தேவைப்படும் என ரயில்வே துறை ராஜாங்க அமைச்சர் அதிர் ரஞ்சன் சவுத்திரி தெரிவித்துள்ளார். நிதி ஒதுக்கீடு குறித்த விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, அவருக்குப் பின்னர் இத்துறைக்கு பொறுப்பேற்ற முகுல் ராய் பதவி காலங்களில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் முறையாக பரிசீலனை செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.55 கிலோ மீட்டர் தூர பிளாசி மற்றும் ஜியாகஞ்ச் இடையிலான 55 கிலோ மீட்டர் தூர இரட்டை இருப்புப் பாதை திட்டத்தை துவக்கி வைத்து பேசிய ரஞ்சன், மேற்கண்ட தகவலை வெளியிட்டார். இந்த திட்டம், ரூ.234 கோடி செலவில், இரண்டரை ஆண்டுகளில் நிறைவேற்றப்பட உள்ளது.