Indian Railways News => Topic started by irmafia on Nov 20, 2012 - 00:00:40 AM


Title - மயிலாடுதுறை- பழனி இடையே ரயில் இயக்க வலியுறுத்தல்
Posted by : irmafia on Nov 20, 2012 - 00:00:40 AM

By  கும்பகோணம்
First Published : 19 November 2012 12:53 PM IST
மயிலாடுதுறையிலிருந்து பழனிக்கு ரயில் இயக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் துணைத் தலைவர் ஏ. கிரி திருச்சி ரயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
திண்டுக்கல் - பழனி இடையே வரும் நவ. 20-ம் தேதி முதல் அகல ரயில் பாதையில் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதை ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் வரவேற்கிறோம்.
அதேநேரத்தில், மயிலாடுதுறையிலிருந்து - கும்பகோணம் - தஞ்சாவூர் வழியாக செல்லும் மயிலாடுதுறை - திருநெல்வேலி பாசஞ்சர் ரயிலில் கூடுதல் பெட்டிகளை பழனிக்கு பிரத்தியேகமாக இணைத்து, அதை திண்டுக்கல் வரை இயக்க வேண்டும். திண்டுக்கல்லில் அந்த ரயில் பெட்டிகளை கழட்டி, அதை பழனி வரை தனியாக இயக்க வேண்டும்.