Indian Railways News => Topic started by riteshexpert on Jun 13, 2013 - 21:01:52 PM


Title - பயணத்தை துவக்கியது செம்மொழி எக்ஸ்பிரஸ்
Posted by : riteshexpert on Jun 13, 2013 - 21:01:52 PM

கோவை:ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மன்னார்குடி-கோவை இடையிலான செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று கோவையிலிருந்து புறப்பட்டு சென்றது.
ரயில்வே பட்ஜெட்டில், "மன்னார்குடி-கோவை இடையே செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும்' என, அப்போதைய ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் அறிவித்திருந்தார்.
அதன்படி, மன்னார்குடி-கோவை எக்ஸ்பிரஸ் (ரயில் எண்16615) ரயில், ஜூன் 11ல் மன்னார்குடியிலிருந்து புறப்பட்டு நேற்று காலை கோவை வந்தது. மறுமார்க்கத்தில் நேற்று இரவு 11.55 மணிக்கு கோவையிலிருந்து மன்னார்குடிக்கு புறப்பட்டது. இதற்கான துவக்க விழாவில், கோவை எம்.பி., நடராஜன், ரயில்வே போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ரயிலில், தலா ஒரு முதல், இரண்டாம் வகுப்பு வகுப்பு ஏசி பெட்டி, ஆறு, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், ஆறு முன்பதிவற்ற பெட்டிகள், இரண்டு பார்சல் பெட்டிகள் என, மொத்தம் 16 பெட்டிகள் உள்ளன.