Indian Railways News => Topic started by railgenie on Nov 20, 2012 - 20:00:04 PM


Title - திண்டுக்கல் பழனி ரயில் போக்குவரத்து துவக்கம்
Posted by : railgenie on Nov 20, 2012 - 20:00:04 PM

திண்டுக்கல் பழனி இடையே அகல் ரயில் பாதை போக்குவரத்து இன்று (20.11.2012) துவக்கப்பட்டது. மதியம் 1 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரயிலை திண்டுக்கல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சித்தன் எம்பி துவக்கி வைத்தார்.

இதில் திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, ஒட்டன் சத்திரம் திமுக எம்.எல்.ஏ. சக்கரபாணி, பழனி அதிமுக எம்.எல்.ஏ. வேணுகோபால், திண்டுக்கல் அதிமுக நகர மன்ற தலைவர் மருதராஜ் மற்றும் ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சித்தன் எம்பி திண்டுக்கல்லில் இருந்து பழனி வரை ரயிலில் பயணம் செய்தார்.