Indian Railways News => Topic started by nikhilndls on Nov 20, 2012 - 00:00:53 AM


Title - திண்டுக்கல்-பழனி புதிய அகலப்பாதையில் செல்லும் ரயில்களின் நேரம் அறிவிப்பு
Posted by : nikhilndls on Nov 20, 2012 - 00:00:53 AM

திண்டுக்கல்-பழனி இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள அகலப்பாதையில் செவ்வாய்க்கிழமை (நவ.20) முதல் செல்லும் ரயில்களின் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அஜய்காந்த் ரஸ்தோகி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திண்டுக்கல்-பழனி இடையே அகலப்பாதை அமைக்கும் பணி நிறைவுபெற்றுள்ளது. இந்த பாதையில் ரயில் போக்குவரத்து தொடக்கவிழா செவ்வாய்க்கிழமை (நவம்பர்20) பிற்பகல் 1 மணிக்கு நடைபெறுகிறது.

புதிய அகலப்பாதையில் முதல் ரயில் (எண் 56774) திண்டுக்கல்லில் இருந்து பயணிகள் ரயில் பிற்பகல் 1 மணிக்கு கொடியசைத்து தொடக்கி வைக்கப்படும். இந்த ரயில் மாலை 2.30 மணிக்கு பழனி சென்றடையும்.

தொடர்ந்து ரயில் எண்:56776 பயணிகள் ரயில் திண்டுக்கல்லில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு இரவு 7 மணிக்கு பழனி சென்றடையும். மறு மார்க்கத்தில் ரயில் எண்:56773 ரயில் பழனியிலிருந்து மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.45 மணிக்கு திண்டுக்கல் வந்தடையும். மற்றொரு ரயில் எண்:56775 பழனியிலிருந்து மாலை 7.45 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு திண்டுக்கல் வந்தடையும்.

கூடுதல் ரயில்: மேலும், புதன்கிழமை முதல் கூடுதலாக ரயில் எண்:56772 பயணிகள் ரயில் திண்டுக்கல்லில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு, காலை 6.45 மணிக்கு பழனி சென்றடையும். ரயில் எண்:56771 பயணிகள் ரயில் பழனியிலிருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு, காலை 9.30 மணிக்கு திண்டுக்கல் வந்தடையும். இந்த ரயில்கள் அக்கரைப்பட்டி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி ஆகிய இடங்களில் நின்று செல்லும். ரயில்களில் 8 2-ம் வகுப்பு பொதுப்பெட்டிகளும், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய 2-ம் வகுப்பு பொதுப்பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும், என தெரிவித்துள்ளார்.