Indian Railways News => Topic started by AllIsWell on Nov 19, 2012 - 09:00:50 AM


Title - அரக்கோணம் அருகேதண்டவாளத்தில் விரிசல் எக்ஸ்பிரஸ்கள் தப்பின|Near Arakkonam Cracks in rail track in Exp
Posted by : AllIsWell on Nov 19, 2012 - 09:00:50 AM

அரக்கோணம்: அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது உரிய நேரத்தில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் தப்பின.

அரக்கோணம், திருவள்ளுர் ரயில் நிலையம் இடையே நேற்று முன்தினம் இரவு ஊழியர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் மார்க்கத்தில், திருவலங்காடு அருகே இரவு 10.45 மணியவில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, இதுகுறித்து கடம்பத்தூர் மற்றும் திருவள்ளுர் ரயில் நிலையங்களுக்கு தகவல் கொடுத்தனர். மேலும், Ôஇந்த வழியாக ரயில்களை இயக்க வேண்டாம்Õ என தெரிவித்தனர். இதனால், சென்னை யில் இருந்து கோவை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ், சென்னையில் இருந்து ஈரோடு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ், சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் பெங்களூரு மெயில், சென்னையில் இருந்து மும்பை செல்லும் மும்பை மெயில் ஆகிய ரயில்கள் ஆங்காங்கே வழியில் நிறுத்தப்பட்டன. இதனால், பயணிகள் பெரும் அவதிப்பட்டனர். இதையடுத்து, ரயில்வே ஊழியர்கள் விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு, நள்ளிரவு 12 மணியளவில் விரிசலை சரி செய்தனர். இதைத்தொடர்ந்து, ஆங்காங்கு நிறுத்தப்பட்ட ரயில்கள் புறப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள், உரிய நேரத்தில் விரிசலை கண்டு பிடித்து தகவல் தெரிவித்ததால், கோவை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் அதிர்ஷ்டவசமாக தப்பியது என்பது குறிப்பிடத்தக்கது