கண்காணிப்பு கேமரா, ஸ்கேனிங் வசதியுடன் கோவை ரயில் நிலையம் ரூ.75 லட்சத்தில் நவீனமாகிறது|- Dinakaran by eabhi200k on 23 July, 2012 - 12:00 AM | ||
---|---|---|
eabhi200k | கண்காணிப்பு கேமரா, ஸ்கேனிங் வசதியுடன் கோவை ரயில் நிலையம் ரூ.75 லட்சத்தில் நவீனமாகிறது|- Dinakaran on 23 July, 2012 - 12:00 AM | |
கோவை: கோவை ரயில் நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பு வசதிக்காக ரூ.75 லட்சம் செலவில் கேமரா மற்றும் ஸ்கேனர் பொருத்தப்படுகிறது. கோவை ரயில் நிலையம் உள்ளிட்ட 72 ரயில் நிலையங்கள் ஆதர்ஷ் நிலையமாக நவீனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, முதற்கட்டமாக ரூ.75 லட்சம் செலவில் கோவை ரயில் நிலையத்தில் உள்கட்டமைப்பு வசதி செய்யப்பட உள்ளது. இதன்படி, அனைத்து பிளாட்பாரங்கள், அனைத்து பிரிவு அறைகள், முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா டிக்கெட் விநியோகிக்கும் பிரிவு, நடைபாதைகள், கிளாக் ரூம், பயணிகள் ஓய்வெடுக்கும், தங்கும் இடம், ரயில் நிலைய குளிர்சாதன அறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் 79 நவீன சுழலும் சிசிடிவி கேமரா வைக்கப்பட உள்ளது. இதற்காக 8 மெகா டி.வி.க்கள் பயன்படுத்தப்பட உள்ளது. |